வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், நெல்லை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல் காமாட்சிபுரத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்ப ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்புமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருமழைக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.