தன்னம்பிக்​கை வி​தைகள்

 தன்னம்பிக்​கை வி​தைகள்

முயற்சி

வெற்றியென்னும் பழம் பெற வியர்வை நீரை முயற்சிச் செடியில் ஊற்ற வேண்டும். தரை தொடாத விதைகள் என்றுமே முளைப்பதில்லை?

தாகம் தணிய வேண்டுமெனில் தண்ணீர் குவளையை கைகள் எடுக்க வேண்டுமல்லவா ? குவளையைப் பார்த்துக் கொண்டே இருந்தால் தாகம் தணியுமா ?ஒரு பள்ளியில் ஆசிரியர் தன் மாணவர்களைப் பார்த்து கேட்கிறார் ? நீ என்னவாக வர விரும்புகிறாய் ? பிள்ளைகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு டாக்டர், இன்ஜினியர், டீச்சர் என்று சொல்லும் ! ஆனால் கேள்வி வந்து விட்டதே அதில் இருந்து விடுபட ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டுமே ?! என்று பேசும் சொற்களுக்கு வலு இருப்பதில்லை. கற்பனைகள் கரை சேருவதில்லை.

சினிமாவில் சவால் விட்டு நான்கு நிமிட பாடலில் சிகரம் தொடுவது நம்மால் இயலாத காரியம் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டுமானால், காயம் ஏற்படத்தானே செய்யும். காயத்திற்கு பயந்து முயற்சி செய்யாமல் போனால் வெற்றியடைய முடியாதே ?!

ஒரு ஜென் கதை ஒன்று இறப்பின் தருவாயில் இருக்கும் தந்தை தன் இரு மகன்களை அழைத்து தன் குடும்பத் தொழிலான சீப்பு கம்பெனியை ஒப்படைத்து விற்று வாருங்கள் என்கிறார். முதலாமவன் சென்ற இடமோ ஆண்டிகள் மடம் மொட்டைத் தலைக்கு சீப்பு ஏன் போ.. என்று விரட்டியடிக்கிறார்கள். இரண்டாமவன் போய் நான் விற்று வருகிறேன் என்கிறான். 50 சீப்புகளை விற்று வருகிறான்.

தந்தைக்கோ ஆச்சரியம் மொட்டைத் தலை சாமியாரிடம் எப்படி 50 சீப்பு விற்றாய் என்று ?! சாமியாரைக் காண மலை உச்சிக்கு செல்ல வேண்டும். அங்கே ஒரு கண்ணாடியை வைத்தேன் வரும் பக்தர்கள் வாயிலில் கைகால்களை சுத்தம் செய்துவிட்டு கண்ணாடியில் தலையும் வாரிக்கொண்டால் அவர்களின் தோற்றமும் நன்றாயிருக்கும் என்று சொன்னேன் சீப்புகள் விற்றுவிட்டன. என்றான்.

முயற்சியிருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை 2வது மகன் செய்து காட்டிவிட்டான். இப்படித்தான் முயற்சிகள் பறவையின் சிறகுகள் போல விரிந்தே இருக்க வேண்டும். எடிசனின் முயற்சிசகள் முறியடிக்கப்பட்டு இருந்தால் இன்று மின்சாரம் நமக்குக் கிடைத்திருக்காது முயற்சிப்பவர்கள் வரலாறு படைக்கிறார்கள். எடிசன் தன் 100வது கண்டுபிடிப்பாக மின்சாரத்தை கண்டுபிடித்ததும் ஆர்வத்தில் அதனை கொண்டாட பெரிய விழாவாக ஏற்பாடு செய்து மக்களின் முன் தன் கண்டுபிடிப்பைக் காட்டினான் பெருமிதமாய், அப்போது ஒருத்தர் எழுந்து. 99 சோதனைகளை தோல்வியோடு சந்தித்தவன் நீ எப்படி வெற்றிபெற்றவன் என்று கொண்டாடுகிறாய் எனக்கேட்டார். அதற்கு எடிசன் சற்றும் யோசியாமல் நான் தோற்ற 99 கண்டுபிடிப்புகளும் மின்சாரம் கண்டுபிடிக்க உதவாது என்பதை நான் உணர்த்தியிருக்கிறேனே அது வரையில் என் கண்டுபிடிப்புகள் வெற்றிபெற்றவையே என்றார் எடிசன்.

முகவரி படத்தில் ஒரு காட்சி வரும் உயரம் குறைந்த சிறுவன் மேலே தொங்க விடப்பட்டு இருக்கும் பாட்டிலை அடிக்கவேண்டும் என்று முயற்சி செய்வான். பல முறை தொடர்ந்தும் வெற்றி பெறாமல் கீழே விழுவான் அனைவரும் கேலி செய்வார்கள். ஆனால் தொடர் முயற்சியில் யாருமே எதிர்பாராத வண்ணம் வெற்றியடைந்து விடுவான்.

உனக்கு இது வருமா ? உன்னால் செய்ய முடியுமா என்று வீண் முயற்சி செய்கிறாய் என கேலி பேசுபவர்கள் கூட வெற்றி பெற்றதற்கும் பிறகு விடாமுயற்சி என்று கைகுலுக்குவார்கள். முட்டு சந்திற்குள் வழியல்லை என்று புலம்புவதை விட வழியை கண்டுபிடிக்க முயற்சிப்பதே சிறந்தது. ஆம் திருப்பம் இருந்தால் தான் வீதி அழகு !

எப்படி ஆற்றைக் கடப்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தால் பாலங்கள் கிடைத்திருக்காது ?! தரிசு நிலத்தில் கிணறு வெட்டும் பணி துவங்குகிறது ஐந்து பேர் தொடர்ந்து வேலை புரிந்து இங்கு தண்ணீர் வராது என்று சோர்ந்து விட்டனர். இறுதியில் ஒருவன் வந்தான் ! 50 அடி தோண்டினான் ஊற்று வந்து விட்டது. அவன் வெற்றி பெற்றுவிட்டான். தோண்டிய அடிகள் குறைவென்றாலும் அவன் முயற்சி நிறைந்து விட்டது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...