யுகாதி திருநாள் வாழ்த்துகள்💐💐💐

யுகாதி திருநாள் வாழ்த்துகள்💐💐💐

பொது நலம் என்பது
தனி மனிதன் செய்வதே…
தன்நலம் என்பதும்
தனி நபர்கள் செய்வதே…

அலாதி அன்பிருந்தால்
அனாதை யாருமில்லை…
அடாது துயர் வரினும்
விடாது வென்றிடுவோம்…

அகண்ட பாழ் வெளியில்
ஓர் அணுவாம் நம்முலகு
அதில் நீரே பெருமளவு
நாம் அதிலும் சிறிதளவே…

சரிச்சமம் என்றிடும் முன்பு
உனைச்சமம் செய்திட பாரு
சினையுரும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு…

உலகிலும் பெரியது
நம் அகம் வாழன்புதான்
அழிவின்றி வாழ்வது
நம் அறிவும் அன்புமே…

மனதின்ஓசைகள்

மஞ்சுளாயுகேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!