குஜராத் வந்து சேர்ந்தது ‘ஷிவாலிக்’ சரக்கு கப்பல்

அகமதாபாத்: சுமார் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்துக்கு திங்கட்கிழமை மாலை சரக்கு கப்பலான ‘ஷிவாலிக்’ வந்து சேர்ந்தது. கடந்த சனிக்கிழமை அன்று ஹார்முஸ் ஜலசந்தியை இந்தக் கப்பல் பாதுகாப்பாக கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த கப்பல் இன்று (மார்ச் 16) மாலை 5 மணி அளவில் குஜராத் வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்பு செயலாளரான ராஜேஷ் குமார் சின்ஹா தெரிவித்திருந்தார். இதேபோல சுமார் 81,000 டன் கச்சா எண்ணெய் உடன் முந்த்ரா துறைமுகம் நோக்கி ‘ஜக் லாட்கி’ கப்பல் வந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் நாளை (மார்ச் 17) இந்தியா வந்தடையும் என கூறியுள்ளார்.

ஈரானுடன் நேரடியாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் போற்றி பேசினார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்களை அனுமதித்ததற்கு ஈரான் பிரதிபலனாக எதையும் பெறவில்லை என்றும், நட்பின் அடிப்படையிலேயே இது நடந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்​முஸ் ஜலசந்​தி​ முடக்கம்:

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் தீவிரமடைந்து வரு​கிறது. இதன் எதிர்​விளை​வாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்​குக் கப்​பல் போக்​கு​வரத்தை ஈரான் ராணுவம் முழு​மை​யாக முடக்கி உள்​ளது.

ஆசிய நாடு​களுக்​கான கச்சா எண்​ணெய், சமையல் காஸ் சரக்கு போக்​கு​வரத்​தில் 85 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடை​பெறுகிறது. அங்கு நாள்​தோறும் 150-க்​கும் மேற்​பட்ட சரக்​குக் கப்​பல்​கள் கடந்து செல்​வது வழக்​கம். ஆனால் தற்​போது ஈரான் ராணுவம் அனு​ம​திக்​கும் சில கப்பல்​கள் மட்​டுமே ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து செல்​கின்​றன. கடந்த சில நாட்​களில் 18-க்​கும் மேற்​பட்ட சரக்கு கப்​பல்​களை ஈரான் ராணுவம் நடுக்​கடலில் வெடிகுண்​டு​கள் மூலம் தகர்த்து உள்​ளது.

இந்தச் சூழலில் இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல ஈரான் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 7-ம் தேதி கத்​தா​ரின் ராஸ் லபான் துறை​முகத்​தில் இருந்து சமையல் காஸுடன் புறப்​பட்ட ஷிவாலிக் சரக்​குக் கப்​பல், போர் அச்​சுறுத்​தல் காரண​மாக பெர்​சிய வளை​குடா பகு​தி​யில் நிறுத்​தப்​பட்டு இருந்​தது. அந்தக் கப்​பல் ஈரான் ராணுவ அனு​ம​தி​யுடன் கடந்த சனிக்கிழமை அன்று பாது​காப்​பாக ஹார்​முஸ் ஜலசந்தியை கடந்​து இந்தியா வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!