சந்திரயான்-2:
நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்களை படம்பிடித்த சந்திரயான்-2: நிலவில் மின்காந்த துகள்களையும் ‘ஆர்பிட்டர்’ கண்டுபிடித்தது
நிலவில் மின்காந்த துகள் ஆர்பிட்டர் கண்டுபிடிப்பு.
இந்த நிலையில், நிலவை ஆய்வு செய்து வரும் ஆா்பிட்டா், புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு செய்யும் என்ற புதிய தகவலை இஸ்ரோ வெளியிட்டது. அதே நேரம் விக்ரம் லேண்டர் கருவி வேகமாக தரை இறங்கியிருக்கக் கூடும் என்றும் அதனால் நிலவின் தரைப்பகுதியில் மோதி செயல் இழந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திரயான் -2 விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அதன் செயல்பாடுகளும் திருப்தியாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்த நிலையில், நிலவின் தரைப்பகுதியில் மின்காந்த துகள்கள் இருப்பதை ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரோவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நிலவின் மிக நெருக்கமான புகைப்படங்கள் வெளியீடு:
இந்நிலையில், ஆர்பிட்டரில் உள்ள உயர் தெளிவுதிறன் கொண்ட கேமரா நிலவின் தென் துருவத்தில் எடுத்த மிக நெருக்கமான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளை அடையாளப்படுத்தி அறியும் வகையில், தெளிவான புகைப்படங்களை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது. 100 கி.மீ., உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்களில் 14 கி.மீ., நீளமும், 3 கி.மீ., விட்டமும் கொண்ட போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தின் ஒரு பகுதி பதிவாகியுள்ளது. இந்த பள்ளம் நிலவின் தென் பகுதியில் உள்ளது. இந்த படம் கடந்த மாதம் (5.9.19) காலை, இந்திய நேரப்படி காலை 4.38 மணியளவில் எடுக்கப்பட்டது.