காதல் காதல் காதல்

 காதல் காதல் காதல்
காதல் காதல் காதல்

மாலை மங்கும் அந்த இனிமையான நேரத்தில் சென்னை கடற்கரை காற்று வந்து ரகிமாவின் பட்டு கூந்தலை அழகாய் வருடிச் சென்றது.
யாரையுமே பார்த்ததும் வசிகரீக்கும் அழகான புன்னகையை எப்போதும் தவழ விட்டிருக்கும் ரோஜாவை போன்ற செக்க சிவந்த இதழ்கள் . கருவண்டு விழிகள் என பார்ப்பவர்கள் யாரையுமே கவர்ந்துவிடும் அழகு.

“ரகிமா..”

“ஹ்ம்ம்…. சொல்லு கார்த்திக்..?”

“இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே உட்கார்ந்திட்டு இருக்கறது…?”

“ஏன் கார்த்திக் எங்கூட இருக்க உனக்கு பிடிக்கலையா என்ன..?

“ஏய் நான் அப்படி சொன்னேனா ..? உங்க வீட்ல உன்னை தேடுவாங்களேன்னு தான் கேட்டேன். 

“ஏன் கார்த்திக் நாம் இன்னுன் எத்தனை நாளைக்கு தான் இப்படி காதலர்களாவே இருக்கறது..?”

“எனக்கு மட்டும் என்ன இப்படியே இருக்கனும்னு ஆசையா என்ன …? நான் இந்து நீ முஸ்லிம் கண்டிப்பா நம்ம இரண்டு பேர் வீட்லையும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல மாட்டாங்க,நாம ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னா நீ வேண்டாம் நாம ரெண்டு பேரு வீட்லையும் சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணனும்ன்னு சொல்ற அதுக்கு நாம கொஞ்ச நாள் பொறுமையா இருந்து தான் ஆகனும் ஷர்மி. வேற வழி இல்ல.

“பெத்தவங்க சம்மதம் இல்லாம நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்களோட கண்ணீரே நம்மள வாழவிடாம பண்ணிடும் கார்த்திக். சின்ன வயசில இருந்தே நமக்கு ஒவ்வொன்னும் பார்த்து செய்தவங்க இந்த கல்யாண விஷயத்துல மட்டும் நாம அவங்க பேச்சை கேக்காம போயிட்டோமேன்னு அவங்களுக்கு ஒரு வருத்தம் இருக்கும், அதை நாம தான் அவங்களுக்கு புரிய வைக்கணும் எத்தனையோ பேர் அதை பண்ணாமலே வீட்ட விட்டு ஓடி போய் கல்யாண பண்ணிட்டு பெத்தவங்க மனச காயபடுத்தறாங்க நாமளும் ஏன் அதையே செய்யணும். நம்ம காதலை அவங்களுக்கு புரிய வைப்போம் அவங்க வாயாலேயே காதல் தப்பில்லைன்னு சொல்ல வைச்சி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கி, அவங்க சந்தோஷத்துல நாமும் சந்தோஷபடுவோமே…!”

“நீ சொல்ற மாதிரி நடந்தா எனக்கும் சந்தோஷம் தான் ஷர்மி..” நிச்சயம் நாம ஒரு எடுத்துக்காட்டா இருப்போம் இந்த உலகத்துக்கு.

“சரி கார்த்திக் எனக்கு நேரம் ஆகுது கிளம்பலாம்.”


“அம்மா…அம்மா…. எனக்கு பசிக்குத்தும்மா சீக்கிரம் டிபன் ரெடியா…? 

“ஏண்டி உனக்கு இத்தனை அவசரம். கொஞ்சம் இரு உங்கப்பா வந்துடட்டும். உங்கிட்ட ஏதோ பேசனும்ன்னு சொன்னார்.”

“என்னம்மா என்ன விஷயம்…?”

என்ன கேட்டா எனக்கென்ன தெரியும்..?

உனக்கு தெரியாம எப்படிம்மா இருக்கும். சரி போ அப்பா வந்தாச்சு நான் அப்பா கிட்டேயே கேட்டுக்கிறேன்.

“சாப்பிட வாங்கப்பா..”

“என்னம்மா … உங்கம்மா கிட்ட ஏதோ சண்டை போடற மாதிரி இருக்கு..?

அதெல்லாம் ஒண்ணும் இல்லையே. ஏன்பா நீங்க எங்கிட்ட ஏதோ பேசனுமின்னு சொன்னிங்களாமே என்ன விஷயம்..?

எல்லாம் நல்ல விஷயம் தான் உனக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியுது இல்லையா. அதான் உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க சொல்லி இருந்தேன். அது விஷயமாத்தான் உங்கிட்ட பேசனுமின்னு சொல்லி இருந்தேன். மாப்பிள்ளை M.B.A. முடிச்சிருக்கார். நல்ல வேளையில் இருக்கார். நல்ல குடும்பம் . நான் நல்லா விசாரிச்சிட்டேன்ம்மா. மாப்பிளை சொக்க தங்கம். உன்னை கண் கலங்காம வச்சி காப்பாத்துவாரு. இந்தா இது தான் மாப்பிளை போட்டோ நீ பாரு உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லு. நாம மேற்கொண்டு பேசலாம். 

“அப்பா…”

“என்னடா உனக்கு மாப்பிளைய பிடிச்சிருக்கா…? பிடிக்கலைனாலும் சொல்லு இன்னும் நல்ல இடமா வேற மாப்பிளை பாக்க சொல்லலாம்.”


“ஷர்மிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தலையசைத்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.”

மறுநாள்,


“என்ன ரகிமா அவசரமா வரச் சொன்ன..?”

“கார்த்திக் எங்க வீட்ல அப்பா எனக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பிச்சிட்டார். நேத்து ஒரு போட்டோவை காமிச்சி உனக்கு பிடிச்சிருக்கான்னு சொல்லும்மா.ரெண்டு மூணு நாள் நேரம் எடுத்து நல்லா யோசிச்சி ஒரு நல்ல முடிவா சொல்ல சொல்லி இருக்கார். நானும் எவ்வளவோ இந்த கல்யாணம் வேண்டாம்ங்கிற மாதிரி சொல்லி பார்த்திட்டேன். அப்பாவும் அம்மாவும் ஒரே மூச்சா இந்த கல்யாணத்தை பண்ற முடிவுல இருக்காங்க. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. .நாம வீட்ல நம்மளோட காதல சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சின்னு நினைக்கிறேன்.”

“ஹ்ம்ம்… ஆமா இதுக்கு மேல எதையும் மறைக்க முடியாது. நானும் எங்க வீட்ல இன்னைக்கே இதை பத்தி பேசறேன். ஒரு வேளை நம்ம சந்திக்கற கடைசி சந்திப்பா கூட இருக்கலாம் ஷர்மி. நாம எடுத்த முடிவுல இருந்து நாம் என்னைக்குமே மாற கூடாது. நாம வீட்ல சொன்னதுக்கப்புறம் ஒரு வேளை நாம சந்திக்க முடியாம போச்சுன்னா நாம ஏற்கனவே பேசினது எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்குல.” 


“ஹ்ம்ம். இருக்கு கார்த்திக். நம்ம காதல் நிஜம். நாம கண்டிப்பா சேருவோம்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு. ஒரு வேளை நீ சொல்ற மாதிரி நாம மறுபடியும் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்காம போச்சுனா….? என்னால அதை நினைச்சு கூட பாக்க முடியல கார்த்திக்.

“அப்படி எதுவும் நடக்காது நாம நம்பிக்கையோடு இருப்போம்.”


“என்னடா கார்த்தி இவ்வளவு நேரம் எங்க போயிட்டு வர்ற… ? சரி கை கால், முகம் கழுவிட்டு வா, சாதம் எடுத்து வைக்கிறேன்.”

“கொஞ்சம் வேலை இருந்துச்சும்மா. அதான் லேட். நீங்க சாப்பிடிங்களா..?” தங்கச்சி எங்க அவ சாப்பிட்டாளா…?

“நீ இல்லாம நான் என்னைக்கு தனியா சாப்பிட்டு இருக்கேண்டா.” அவ அப்பவே சாப்பிட்டு படுத்திட்டா…”

“அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“என்னடா என்ன விஷயம் ஏதோ இழுக்கற…..? 


“அது வந்து… நான் ஷர்மிளான்னு ஒரு பொண்ண காதலிக்கிறேன்ம்மா. அவளும் என்னை விரும்பறா. நாங்க ரெண்டு பேருமே பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படறோம்மா. அவ முஸ்லிம் தான் ஆனா குணத்துல மகாலட்சும்மி. அவ மட்டும் உங்களுக்கு மருமகளா வந்தா…. 

“நிறுத்துடா… நீ பாட்டுக்கு பேசிட்டே போற விட்டா நாளைக்கே கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து இவதான் உன் மருமகன்னு சொல்லுவ போல இருக்கே..” உனக்கு வயசுக்கு வந்த ஒரு தங்கச்சி இருக்க அவளையும் கொஞ்சம் நினைச்சி பாரு. என்னவோ காதலிக்கிறானம் அதுக்கு நான் சம்மதம் சொலணுமா.

“அம்மா…. எனக்கும் தெரியும் எனக்கு ஒரு தங்கச்சி இருக்கானு அவள நான் அப்படியே விட்டுட மாட்டேன். அவளுக்கு இப்ப கல்யாணம் பண்ற வயசு இல்லம்மா. நானே அவளுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பேன் அது என்னோடு பொறுப்பு. 


“ஏண்டா எவளோ ஒருத்திய அதுவும் வேற மதத்தை சேர்ந்த ஒரு பொண்ண நீ கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா நாளைக்கு உன் தங்கச்சிய யாருடா கல்யாணம் பண்ணிக்க வருவா..?”

“அம்மா நீங்க நாளைக்கு நடக்க போறத பத்தி பேசறிங்க, நான் இல்லைன்னா அவ செத்திடுவ்வான்னு சொல்லிட்டு இருக்கேன். என்னால என் தங்கச்சி ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சி தர முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கும்மா. உங்களுக்கு உங்க பையன் மேல நம்பிக்கை இல்லையா…? உங்களோட இந்த பிடிவாததினால வீணா ஒரு உயிர் போயிடும்மா….புரிஞ்சிக்கோங்க.?”

நீ என்ன சொன்னாலும் என்னோட முடிவு இதுதாண்டா. அதை மீறி நீ எதாவது செய்யணும்ன்னு நினைச்சா என்னையும் என் பொண்னையும் உசிரோட பாக்க்க முடியாது. அவ்வளவுதான் சொல்லிடேன்.



“அப்பா புரிஞ்சிக்கோங்க நானும் கார்த்திக்கும் ஒருத்தர ஒருத்தர் மனசார காதலிக்கிறோம். ஆனா உங்க சம்மதம் இல்லாம கல்யாணம் பண்ணிக்க மாட்டோம். நீங்களும் அவரோட அம்மாவும் சம்மதம் சொன்னாதன் இந்த கல்யாணம்.”

“என்னடி பேச்சு பேசற நீ இதுக்குதான் உங்கப்பாகிட்ட நேத்து கல்யாணம் வேணாம் சொன்னியா. அப்படியே எங்க மேல பாசமா இருக்கறா மாதிரி உருகி உருகி பேசினியே இப்பத்தானே தெரியுது எல்லாமே பாசம் இல்ல வேஷம்ன்னு.”

“ஜாகிரா நீ எதுவும் பேசாத.” அவ இன்னும் பேசி முடிக்கல பேசட்டும்.

“என்னங்க அவதான் ஏதோ உளர்றானா நீங்களும் கேட்டுட்டு, பேசட்டும் சொல்றீங்க.”

“அவ அவளா பேசலடி அவன் பேச வைக்கிறான். அதான் இங்க வந்து இப்படி ஆடறா.” இவங்க காதலிப்பாங்களாம் நாம சம்மதம் சொல்லணுமாம்.” நீ இத்தனை நாள் படிச்சி கிழிச்சதெல்லம் போதும் இனிமேல் வீட்ல இரு. அடுத்த வாரமே பொண்ணு பார்க்கறதுக்கான எல்லா ஏற்பாடும் பண்றேன்.


என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த ஷர்மி. உடனே ஒரு முடிவெடுதவாளாய். ஒரு வெள்ளை காகிதம் எடுத்தாள். அதில்


அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு, உங்கள் பாசத்திற்கு உரிய மகள் ரகிமா எழுதிக் கொள்வது. உங்கள் விருப்பதை மீறி திருமணம் செய்வதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் என்னால் நீங்கள் சொல்வது போல் வேறு ஒருவரை மணந்து வாழவும் முடியாது. அதனால் நான் இந்த வீட்டை விட்டும் உங்களை விட்டும் பிரிந்து செல்கிறேன். நான் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் உங்கள் மகளாக மட்டுமே வாழ்வேன். இது நிச்ச்யம். என்னை எங்கும் தேட வேண்டாம். நீங்கள் மனம் மாறினால் நிச்சயம் நாங்களே உங்களைத் தேடி வருவோம்.

அங்கு கார்த்திக்கும் இதே போன்று ஒரு கடிதம் எழுதி விட்டு வீட்டை விட்டு புறப்பட்டான்.


நாட்கள் நகர்ந்தது…….


கோயம்புத்தூரில் இருக்கும் ஒரு அனாதை ஆசிரமத்தில்… 

” ரகிமா… கொஞ்சம் இங்க வாம்மா இந்த குழந்தைய யாரோ நேத்து நம்மளோட இல்லத்து வாசல்ல போட்டு போயிட்டாங்க. இன்னைலருந்து இந்த குழந்தையை உன்னோட பொறுப்பிலேயே நீயே பார்த்துக்கம்மா. 

கொடுங்க சிஸ்டர் என்று அந்த குழந்தையை சந்தோஷத்துடன் வாங்கி அனைத்துக் கொண்டாள். அந்த குழந்தையை பார்த்ததும் ரகிமாவிற்கு கார்த்திக்கின் நினைவு வந்தது.

“என்ன கார்த்திக் இன்னைக்கு அப்படி பாக்கறே என்ன..?”

“ம்….தெரியல இன்னைக்கு நீ ரொம்ப அழகா தெரியற…?”

“அப்போ இத்தனை நாள் அப்படி தெரியலையா ..?’

“அப்படி இல்லை… இன்னைக்கு ஏதோ சம்திங்க் ஸ்பெசலா தெரியுது..?” அதான்…

“ஹ்ம்ம்..”

“ரகிமா….. எனக்கு உன்னை மாதிரியே ஒரு பெண் குழந்தை வேணும்…” நமக்கு பிறக்க போற முதல் பெண் குழந்தைக்கு பெயர் என்ன தெரியுமா குட்டி ரகிமா….

“இல்ல கார்த்திக் எனக்கு உன்னப் போலவே ஒரு பையன் தான் வேணும்… ” 

முதல்ல பொண்ணு அப்புறம் தான் பையன்… – கார்த்திக்

இல்லை இல்லை முதல்ல குட்டி கார்த்திக் அப்புறம் தான் பொண்ணு…

“எந்த குழந்தையா இருந்தா என்ன…?” நாம அந்த குழந்தைய நல்ல படியா வளர்த்து பெரிய ஆளாக்கனும். குழந்தைகளுக்குள்ள இந்த ஜாதி மதம் அப்படிங்கிற வேறுபாடு இல்லாம நல்லபடியா வளர்த்து இந்த சமுதாயத்துல ஒரு நல்ல இடத்துல கொண்டு வரணும். என்று அவர்கள் இருவரும் அன்று பேசி மகிழ்ந்ததை எண்ணி இன்று கண்களின் ஓரம் கண்ணீர் எட்டி பார்த்தது. 

இருவரின் வீட்டிலும் தான் எத்தனை எதிர்ப்புகள். ஏன் இந்த சமுதாயம் ஒரு கலப்பு திருமணத்தை இப்படி எதிர்க்கிறது. பெற்றவர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று நாங்கள் நினைத்தது தவறா…? இருமணம் இனைந்தது தான் திருமணம் என்பார்கள் நாங்கள் அனைவரின் மனதும் இனைய வேண்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைத்தது எங்கள் தவறா..? என்று சிந்தித படியே அன்றைய வேலைகளில் மூழ்கி போனாள் ரகிமா.


அதே சமயம்… ஆந்திர மாநிலத்தில் உள்ள எய்ட்ஸால் பாதிக்க பட்ட குழந்தைகள் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் கார்த்திக் தன் சேவைகளை செய்து வந்தான்.

இருவரும் இப்போதும் காதலித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் காதல் உண்மை. நிச்சயம் ஒரு நாள் கை கூடும் இவர்கள் காதல் இல்லை என்றாலும் இவர்களை போல் உண்மையாக காதலித்து தன் பெற்றவர்கள் சம்மத்திற்காக காத்திருக்கும் அவர்களின் காதல் ஜெயித்தால் கூட அது இவர்களின் காதலுக்கு கிடைத்த வெற்றிதான்.


















admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...