கடும் லவ் பீவரில் பிக்பாஸ் வீடு … போலி காதலில் போட்டியாளர்கள்! | தனுஜா ஜெயராமன்
பிக்பாஸ் வீட்டில் மணி ரவீனா இவர்களின் கொஞ்சல் கெஞ்சல் உரையாடல்களே நமக்கு கடும் கொலைவெறியைத் தருகிறது. இது போதாதென்று இந்த வரிசையில் லேட்டஸ்டாக நிக்சன் ஐஷூவும் சேர்ந்திருக்கிறார்கள். ‘இருக்கு.. ஆனா .. இல்லை’ என்று இவர்கள் அடிக்கடி கூடி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் நமக்கே காண்டாகிறது.
கடந்து வந்த பாதையில் ஆத்ரடாக்ஸ் பேமிலி வயசுக்கு வந்ததும் டான்ஸ் வேண்டாம் என நிறுத்த சொன்னார்கள் என கண்ணை கசக்கிய ஐஷூ முதல் இரண்டு வாரம் சூப்பராக விளையாடி வந்தார். அவரது விளையாட்டு முறை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது. ஆனால் போகப்போக நிக்சன் வீசிய காதல் வலையில் விழுந்த ஐஷூ, தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார்.
முழுநேரமும் நிக்சன் உடனே இருப்பதும் அவருக்கு உணவு ஊட்டி விடுவது , லைவ் ஷோவில் கண்ணாடிக்கு இடையே முத்தம் தருவது என பிக்பாஸ் வீட்டில் லவ் பர்ட்ஸ் ஆகவே இருவரும் வலம் வருகின்றனர்.
சோசியல் மீடியாவிலேயே இவர்களது காதல் கடுப்பேற்றும் விதமாக உள்ளதாக எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில், தற்போது அனைவருமே ஆளாளுக்கு பிக்பாஸ் வீட்டில் ஆளை செட் பண்ணி வருவது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
ஏற்கனவே இருப்பது போதாதென்று, வீட்டில் இன்னொரு ஜோடி ரொமான்ஸ் டிராக்கில் இணைந்து விடும் போலிருக்கிறது. மணி ரவீனா, நிக்சன் ஐஷூ செய்யும் அலப்பறைகளை வேடிக்கை பார்த்த பூர்ணிமா, ‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு என்று “ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று விக்ரமிடம் சொல்ல “ஐய்யோ” என்று பார்வையாளர்கள் கதறுகிறார்கள்.
இதுவும் போதாமல் ப்ரதீப் , அட்சயா ப்ராவோவை கோர்த்து விட்டு கும்மியடிப்பதோடு தனக்கும் தகுந்த ஜோடியை தேடி வருகிறார். அவர் விசித்ராவையும் விட்டு வைப்பதில்லை.
ஏற்கனவே விக்ரம் சரவணன் பூர்ணிமாவோடு , அக்சயாவோடு வழிந்து வருகிறார். விஷ்ணு பூர்ணிமாவை ட்ரை பண்ண, என ஒரே லவ் ஜோடிகளாக பிக்பாஸ் வீடு வலம்வருகிறது.
மாயா , ப்ரதீப் இருவரும் பலரை ஜோடி சேர்த்து வைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விசித்ரா சின்ன பாஸ் மீது கண் வைத்திருக்கிறார். கூல் சுரேஷ் பூர்ணிமாவை லுக்கு விட , பூர்ணிமா சித்தப்பா என கலாய்க்க நமக்கு தான் தலையை பீய்த்து வருகிறது.
ஏற்கனவே போன சீசனில் அடாவடியாக ஜெயித்ததை முன்மாதிரியாக எடுத்து கொண்டு பலர் அடாவடி செய்து வருகின்றனர். அவர்களே சண்டை எல்லாம் கண்டன்ட் என உளறி வருகிறார்கள்.
தற்போது ஆளாளுக்கு போலியாக ஆளை செட் செய்து லவ் கேம் ஆட தயாராகி வருகின்றனர். “இதெல்லாம் என்ன சிம்ரன்” என நெட்டிசன்கள் வழக்கம் போல கலாய்க்க பிக்பாஸ் வீடோ பயங்கர லவ் பீவரில் நுழைய காத்திருக்குறது…!!!