வெளியானது தங்கலான் டீஸர்..!
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
கேஜிஎஃஅப்பின் உண்மையான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம் என பா. ரஞ்சித் கூறியிருந்தார். நடிகர் சியான் விக்ரமின் தோற்றம் மற்றும் நடிப்பு தாறுமாறாக உள்ளது.
ஆனால், அதே சமயம் டீசரை பார்த்தால் போர்க்களத்தை தவிர கதைக்களம் பெரிதாக இருப்பது போல தெரியவில்லையே என்கிற குறையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படத்தான் செய்கிறது.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தங்கலான். சியான் விக்ரம் நடிப்பில் பீரியட் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் காட்டுவாசி கெட்டப்பில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கோலார் தங்க வயலில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்து இருந்தார்.
தங்கலான் டீசரை பார்க்கிறோமா அல்லது பொன்னியின் செல்வன் மற்றும் யாத்திசை படத்தின் டீசரை பார்க்கிறோமா என்கிற அளவுக்கு தங்கலான் டீசரை பார்த்ததும் பல சந்தேகங்கள் கிளம்புகின்றன. சியான் விக்ரமின் உடல் மொழி, உழைப்பு எல்லாம் தெளிவாக தெரிந்தாலும், பா. ரஞ்சித் சொல்ல வரும் கதை தான் புரியவில்லை என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.
ஒரு ராஜ நாகத்தின் தலையை சியான் விக்ரம் பிய்த்து எறியும் காட்சிகள் ஃபயர் விடும் அளவுக்கு தாறுமாறாக இருக்கின்றன. கோப்ராவாக நடித்த சியான் விக்ரமையே வைத்து இந்த காட்சியை பா. ரஞ்சித் வைத்திருப்பது தரமான சம்பவம். மாளவிகா மோகனனை காட்டும் அந்த ஃபிரேம் வித்தியாசமாக உள்ளது.
ஆனால், பசுபதியை தவிர்த்து ஆங்கிலேயர்களை காட்டும் போது வெயிட்டான வில்லன் போல யாரையும் காட்டவில்லை. 1.33 நிமிட டீசரில் பெரிதாக கதையை ரிவீல் செய்ய விரும்பாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தாலும், தங்கலான் டீசர் கொடுத்த பில்டப்புக்கு சியான் விக்ரமை தவிர்த்து எதுவும் பெரிதாக கவரவில்லை என்று தான் தோன்றுகிறது. டிரெய்லரில் கதையை கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும். ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை வெகுவாக ரசிகர்களை கவர்கிறது.