சில நிமிடங்களில் ரூ.6 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள் ஆடிப்போன இந்திய பங்குச் சந்தைகள்…

 சில நிமிடங்களில் ரூ.6 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள் ஆடிப்போன இந்திய பங்குச் சந்தைகள்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 900 புள்ளிகள் குறைந்தது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 5 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்தது. இன்றும் காலையில் பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் பெரிதாக வெடிக்கும் அபாயம், அமெரிக்க கருவூல பத்திரங்கள் வருவாய் குறித்த கவலை போன்றவை இந்திய பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்திய பங்குச் சந்தைகள் இன்று காலையில் பெரிய சரிவுடன் தொடங்கின. மேலும் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 900 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கடந்த 12 மணி நிலவரப்படி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய 2 பங்குகளை தவிர்த்து மற்ற 28 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை சுமார் 7 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் சில மணி நேரத்தில் முதலீட்டாளர்கள் ரூ.5.8 லட்சம் கோடியை இழந்தனர். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.304.44 லட்சம் கோடியாக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி, கடந்த ஜூன் 28க்கு பிறகு முதல் முறையாக இன்றுதான் 18,900 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. பங்குச் சந்தைகளில் இன்று ஏற்பட்டுள்ள வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...