காத்து வாக்குல ரெண்டு காதல் – 13 | மணிபாரதி

 காத்து வாக்குல ரெண்டு காதல் – 13 | மணிபாரதி

அத்தியாயம் -13

ந்தினி, காபி ஷாப் வாசலில், ஆட்டோவில் வந்து இறங்கினாள். ராகவ் உள்ளிருந்து வெளியே வந்து “வா நந்தினி..“ என அவளை வரவேற்றான்.

“என்ன திடீர்ன்னு போன் பண்ணி வர சொல்லி இருக்க..“ அவள் கேட்டாள்.

“எல்லாம் நல்ல விஷயம்தான்.. உள்ள வா போய் பேசலாம்..“

இருவரும் உள்ளே சென்றார்கள்.

ஒரு டேபிளில் பத்மாவும் அவளது அண்ணன் சரவணனும் உட்கார்ந்திருந்தார்கள். ராகவ் அவர்கள் அருகே நந்தினியை அழைத்து வந்தான். நந்தினியை சரவணனுக்கு அறிமுகப்படுத்தினான்.

“ இவதான் நந்தினி..“

சரவணன் “ஹலோ..“ என்றான்.

அவள், யார் என தெரியாததால் அரை மனதுடன் “ஹலோ..“ என்றாள்.

ராகவ் “இவர் சரவணன்.. பத்மாவோட ஓன் பிரதர்.. யு எஸ்ல ஒர்க் பண்றார்..“ என்றான்.

“அப்படியா..“

“ஆமாம்.. சரி என்ன சாப்பிடுற..“

“சாதாரண ஃபில்டர் காபி போதும்..“

“நீ அதைதான் சொல்லுவன்னு தெரியும்..“ என்று கூறி சிரித்து விட்டு, பேரரை அழைத்து நான்கு காபி சொன்னான். பேரர் போனதும் “நந்தினி உன்கிட்ட இப்ப நா ஒரு விஷயம் சொல்வேன்.. அதை நீ மறுக்கக் கூடாது.. எங்க சைட், அதாவது நா, பத்மா, சரவணன் மூனு பேரும் உக்காந்து, நல்லா தெளிவா பேசிதான் இந்த முடிவ எடுத்துருக்கோம்.. அதுக்கப்புறமாதான் உனக்கு போன் பண்ணேன்..“

அவள் புரியாமல் பார்த்தாள்.

“சரவணனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி குடுக்கனும்ன்னு பத்மா ஆசைப்படுறா..“

நந்தினி திடுக்கிட்டு பார்த்தாள்.

“யு எஸ் மாப்பிள்ளைய கட்டிகிட்டா அப்பாவோட நிலமை என்ன ஆகறதுன்னு யோசிக்க வேண்டாம்.. அதையும் சேர்த்து நாங்க யோசிச்சுட்டோம்.. ஒண்ணு சரவணன் யு எஸ் வேலைய விட்டுட்டு இங்கயே எதாவது ஒரு கம்பெனில ஜாய்ன்ட் பண்ணிடுவாரு.. அப்படி இல்ல, உங்கப்பாவ நானும் பத்மாவும் பாத்துக்குவோம்.. உங்கப்பா பத்மாவுக்கும் மாமனார்தான..“

அவள் திகைப்புடன் பார்த்தாள். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரிய வில்லை. சந்தோஷமாகவும் இருந்தது. அவசரப்பட்டு முடிவெடுத்து அது தப்பாகி விடக்கூடாது என்கிற பயமும் இருந்தது.

“என்ன யோசிக்குற நந்தினி..“

“எனக்கு ஒரு ரெண்டு நாள் அவகாசம் குடுப்பிங்களா..“

“ரெண்டு நாள் என்ன.. ரெண்டு மாசம் கூட எடுத்துக்க..  ஆனா, உன் முடிவுக்கு அப்புறம்தான் எங்க கல்யாணம்..“

அவள் பெருமையாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அப்போது சரவணன், “எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கனும்ங்குற ஐடியாவே இல்லை.. பத்மா மேரேஜிக்காகதான் லீவ் போட்டுட்டு வந்தேன்.. இங்க வந்ததுக்கப்புறம், நடந்த எல்லாத்தையும் ராகவ்வும் பத்மாவும் என்கிட்ட எடுத்து சொன்னாங்க.. எனக்கே உங்க மேல பரிதாபம் வந்துடுச்சு.. நீங்க நினைச்சதுல ஒண்ணும் தப்பு இல்ல.. நல்லதைதான் நினைச்சுருக்கிங்க.. ஆனா சூழ்நிலை தப்பா அமைஞ்சு போச்சு..  பரவாயில்ல.. நடந்ததெல்லாம் நடந்தபடியே இருக்கட்டும்.. அதைப்பத்தி இப்ப எதுவும் பேச வேண்டாம்.. உங்களுக்கு நா ஒரு அஷ்யூரன்ஸ் குடுக்குறேன்.. என்னால, உங்களுக்கு நிச்சயமா ஒரு நல்ல லைஃப அமைச்சு குடுக்க முடியும்.. அதுக்கப்புறம் உங்க விருப்பம்..“

“ஐ அக்சப்ட்டட்.. பட் ஐ நீட் டூ டேஸ்.. ப்ளீஸ்..“

“நோ பிராப்ளம்.. டேக் யுவர் ஓன் டயம்..“

“தாங்ஸ்..“

அப்போது காபி வந்தது. நான்கு பேரும் அதை எடுத்து பருக ஆரம்பித்தார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து, ராகவ் நந்தினியை தேடி வந்தான்.

“வா ராகவ்..“

“என்ன முடிவு பண்ண..“

“சரவணன கல்யாணம் பண்ணிக்குறதுன்னு..“

“ஓ.. சூப்பர்..“

“நீங்க மூனு பேரும் சொன்னதை யோசிச்சு பார்த்தேன்.. அப்பாகிட்டயும் டிஸ்கஷ் பண்ணேன்.. இதுதான் சிறந்த வழின்னு தோனுச்சு..“

“கன்கிராஜ்லேஷன் நந்தினி.. சரவணன் ரொம்ப குடுத்து வச்சவர்..“

“தாங்ஸ்..“

ஒரு பெரிய மஹாலில் ராகவ் – பத்மா திருமணமும், சரவணன் – நந்தினி திருமணமும் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

-முற்றும்.

முந்தையபகுதி – 12

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...