டெல்லி உணர்ந்த நிலநடுக்கம்….! | தனுஜா ஜெயராமன்

 டெல்லி உணர்ந்த நிலநடுக்கம்….! | தனுஜா ஜெயராமன்

நேற்று  நேபாளத்தில் 2.25 மணியளவில் 4.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேபாளத்தில் நேற்று  அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் வீடுகள் மற்றும்

அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

டெல்லி மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் பரேலி பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்த சில நிமிடங்கள் இடைவெளியில் 2.50 மணியளவில்  6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக தேசிய புவியியல் ஆய்வு மையத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் பூமியின் மையமான தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டனர். மேலும் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் பூமியின் 5 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...