உறவியல் சிக்கல்களை அலசும் “இறுகப் பற்று” – திரை விமர்சனம்! | தனுஜா ஜெயராமன்
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்நதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘இறுகப்பற்று’. இத்திரைப்படம் அக்-6 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
மூன்று இளம் ஜோடிக்குள் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் ப்ரச்சனைகள் குறித்து விரிவாக அலசியுள்ளது இப்படம்.
மேரேஜ் கவுன்சிலராக இருக்கும் ஷ்ரதா ஶ்ரீநாத் , அவரிடம் கவுன்சிலிங் வருகிறது ஶ்ரீ & தானியா ஜோடி மற்றும் விதார்த் & அபர்நதி ஜோடி.
ஆணாதிக்கமும் தாழ்வுமனப்பான்மையும் ஒருசேர கொண்டவராக ஶ்ரீ, அவரை காதலித்து பின்னர் வெறுத்து கடும் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் சானியா.
பிரசவத்திற்கு பிறகு வெயிட் போடும் அபர்நதி அவளிடம் இருந்து விலகி செல்ல முயலும் விதார்த் .. அவரின் மனச்சிக்கல்கள் என உளவியல்களை பற்றி அதிகம் பேசுறது படம்.
இவர்களுக்கு மேரேஜ் கவுன்சிலிங் செய்யும் ஷ்ரதா , வீட்டில் அவரது மனநலம் சார்ந்த தியரிக்குள் கணவனை அடக்க முயல்கிறார். தன் மனைவியின் டைம்டேபிளை கண்டு அச்சம் கொள்ளும் கணவனாக விக்ரம் ப்ரபு தனது கச்சிதமாக நடிப்பை வழங்குகிறார்.
விதார்த் தனது மனசிக்கலை விளக்கும் இடம் நம்மையும் அசைத்து பார்க்கிறது.
சானியா தனது தரப்பை விளக்கி வெடித்து அழும் இடங்களில், மன அழுத்தம் கொண்ட பெண்ணாக சிறப்பான நடிப்பில் நம்மையும் அழவைக்கிறார்.
நோய் வந்தவர்களுக்கு மருந்து கொடுக்கற சரி. ஆனா நோயில்லாத நாம தினமும் மருந்து சாப்பிடுறோம்னு உனக்கு புரியுதா? என ஷ்ரதா உலுக்குகிறார் விக்ரம் ப்ரபு. மூட்டையுடன் வாழ்கிற நீ வெளிய வருவியா? என ஆச்சர்யபட வைக்கிறார். ஒரு ஆப் தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்குமா என விக்ரம் ப்ரபு வெகுண்டு கேட்கும் இடத்தில் வரும் வசனங்கள் எல்லாம் படத்தின் அசுர பலம்.
மேரேஜ் கவுன்சிலராகவும் சரி , மனைவியாகவும் சரி தனது உணர்வுகளை கட்டுக்குள் வைக்கும் வேலையை தனது கச்சிதமான அசத்தல் நடிப்பால் மிரட்டுகிறார் ஷ்ரதா. சைகாலஜி தகவலுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் இடையே அவர் போராடுவது உளவியல் தத்துவம்.
குறிப்பாம உறவியல் சார்ந்த சைகாலஜிக்கல் படம் இது. இந்த கால இளம் தலையினருக்கு ஏற்படும் இம்மாதிரியான உளவியல் சிக்கல்களுக்கு இது போன்று படங்கள் அதிகம் வருவது சமூகத்திற்கும் நல்லது தான். கத்தி அருவா சாதி என்ற வட்டத்திற்குள் சுழலாமல் உறவியல் சிக்கல் குறித்து பேசியதற்காகவே இயக்குனரை பெரிதும் பாராட்டலாம்.
குறைகள் என்றால் படத்தின் தொடர்ந்து வரும் அறிவுரைகள்.. கேப்பே விடாமல் நம்மையும் அடிக்கிறார்கள். சமுத்திர கனிக்கே டப் கொடுக்கும் மேசேஜ் படமாக இருப்பது.. பாடல்கள் எல்லாம் கூட காட்சிகளில் காணாமல் போவது..கொஞ்சம் கேப் விட்டு அடிங்கப்பா.. என கேட்க வைக்கிறது..
மற்றபடி படம் தற்கால நவீன சமுகத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. படம் நம்மை நமது வாழ்க்கையை முழுவதுமாக கனெக்ட் செய்கிறது. திரையில் ஏதோ ஒரு இடத்தில் நாம் நிச்சயமாக தெரிவோம் நமது மனசாட்சியாக.. நாமும் வாழ்வை இறுகப் பற்றி கொள்வோம்.