பிக்பாஸ் சீசன் 7ல் அசீம்மாக மாற முயலும் ப்ரதீப்…! | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸ் சீசன் 7ல் அசீம்மாக மாற முயலும் ப்ரதீப்…! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் உத்தரவுபடி நேற்று விஜய் வர்மா போட்டியாளர்கள் சிலரை இரண்டாம் வீட்டிற்கு அனுப்பினார். அவர்கள் தான்  மொத்த பிக்பாஸ் வீட்டிற்கும் சமைக்க வேண்டும் என்று பிக்பாஸ் ஆப்பு வைத்தார். இதுவும் போதாமல்  போட்டிகளில் தோற்று கிளீனிங் மற்றும் பாத்ரூம் என அனைத்து வேலைகளும் பிக்பாஸ் சிறிய வீட்டு உறுப்பினர் தலையில் வீழ்ந்தது.

இந்த சீசனில் விதிகள் கடுமையாக பின்பற்றப்படும் என பிக்பாஸ் முதல் நாளே எச்சரித்தார். இருந்தும்

யுகேந்திரனும், விசித்ராவும் விதிகளை மீறி உதவி செய்தனர்.

இதனால் பிக்பாஸ் அவர்களை பனிஷ்மெண்டாக சிறிய வீட்டிற்கு அனுப்பினார். விசித்ராவும் யுகேந்திரனும் இரண்டாவது வீட்டிற்கு செல்ல முடிவெடுத்த நிலையில், தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு இவர்கள் இரண்டு பேருக்கு பதிலாக, அங்கிருக்கும் இரண்டு பேரை இங்கே அனுப்புமாறு பிரதீப் பற்ற வைக்க , உடனே பற்றிக் கொண்ட விசித்ரா எங்களை விட பலமான போட்டியாளர்கள் அங்கே இருக்கிறார்களா? என்று வினவ வழக்கம் போல சண்டை மூண்டது.

இந்த விவகாரத்தில் விஜய் வர்மாவும் தலையிட்டு பிரதீப்பை வெளுத்து வாங்கினார். உடனே விதிமுறைகள் சரியாக பின்பற்றபடவில்லை என குற்றம் சாட்டி ப்ரதீப் விதிகளை படித்துவிட்டு ..”நான் தோத்துட்டேன்ப்பா” என்று பின்வாங்கி ஓடி விட்டார். இதனையடுத்து யுகேந்திரனும், விசித்ராவும் இரண்டாவது வீட்டிற்குள் சென்றனர்.

பழைய சீசனின் அபிஷேக்காக இருந்த பிரதீப் தற்போது முழுதாக  சீசன் 6 வெற்றியாளர் அசீம்மாக மாற முயன்று வருகிறார்.

வீட்டில் இருக்கும் பலர் இன்னமும் தங்கள் இருப்பை காட்டிக் கொள்ளவேயில்லை. வரும் காலங்களிலாவது வெளியே தெரிவார்களா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஏனோ கொஞ்சம் மந்தமாக தான் இருந்தாக தோன்றுகிறது.. நாளை பரபரப்பாக எதேனும் நிகழலாம்.. எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்பது தானே பிக்பாஸ்…!!!!

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...