ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது…

 ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது…

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் அதிகாலை 3 மணிக்கு கைது செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். நந்தியா் பகுதியில் டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீஸார் இன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர்.

ஆனால் சந்திரபாபு வீட்டின் முன் கூடியிருந்த கட்சியினர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது போல் சந்திரபாபு நாயுடு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படைப்பிரிவின் பாதுகாப்பில் இருக்கிறதால் அவரை அதிகாலை 5.30 மணி வரை கைது செய்து அழைத்துச் செல்ல முடியாது என எஸ்பிஜி படையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு காத்திருந்த போலீஸார் சந்திரபாபு நாயுடுவை காலை 6 மணிக்கு கைது செய்தனர். அவர் விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபுவுக்கு எதிராக இந்த வழக்கு 2021 இல் பதிவு செய்யப்பட்டது. ஆந்திரா மாநிலம் நந்தியாலா நகரில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வேனில் ஓய்வு எடுத்திருந்தார். அப்போது அவருக்கு இந்த சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து என் வாகனத்தில் வருகிறேன், உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்றார்.

அண்மையில் சந்திரபாபு நாயுடு ஒரு கூட்டத்தில் பேசிய போது இன்னும் ஓரிரு நாட்களில் நான் கைது செய்யப்படுவேன் இல்லாவிட்டால் தாக்கப்படுவேன் என கூறியிருந்தார். இந்த ஆண்டு ஆந்திர மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஆந்திர முதல்வராக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சந்திரபாபு நாயுடு இருந்தார். அவர் முதல்வராக இருந்த போது மக்களின் பணத்தை கொள்ளையடித்தார் என ஆந்திர மாநில சமூகநலத் துறை அமைச்சர் மெருகா நாகார்ஜுன குற்றம்சாட்டியிருந்தார்.

அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் நேற்று கூறியிருந்ததாவது: ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் ஹைதராபாத்தில் உள்ள லேக் வியூ விருந்தினர் மாளிகையில் இருந்து அவர் தப்பிப்பதற்கு முன்பு பங்களாவை சீரமைக்க ரூ 10 கோடியை செலவு செய்துள்ளார். மற்றொரு 10 கோடி ரூபாயை முதல்வர் அலுவலகத்திற்கு பயன்படுத்தியுள்ளார், ரூ 100 கோடி பணம் விமானங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. மேலும் ரூ 80 கோடி போராட்டங்களுக்கு செலவு செய்துள்ளார் என தெரிவித்திருந்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...