இடியாப்ப சிக்கல் அல்ல … இது “நூடுல்ஸ் சிக்கல்…!”-திரை விமர்சனம்
மதன் தக்ஷிணா மூர்த்தி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘நூடுல்ஸ்’. இந்த படத்தில் ஷீலா மற்றும் ஹரிஷ் உத்தமன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஷீலா ஹரிஷ் உத்தமன் தம்பதிகள் காதல் திருமணம் செய்தவர்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருக்கும் காம்பவுண்ட மொட்டை மாடியில் சக குடியிருப்புவாசிகளுடன் சனிக்கிழமை இரவானால் ஆடி பாடி கும்மாளமிட்டு விளையாடி மகிழ்வது வழக்கம் . அப்படி விளையாடி மகிழும் ஒரு இரவில் சத்தம் கொஞ்சம் அதிகமாக , அந்த தெருவில் ரவுண்ட் வரும் இன்பெக்டர் மதன் தனது கான்ஸ்டபிள்களுடன் கண்டிப்பார்.
அப்போது அந்த குடியிருப்புவாசிகளுக்கும் , போலீஸ்கார்ர்களுக்கும் இடையே வாக்குவாதம் நிகழும் . ஒரு கட்டத்தில் இருதரப்பினரிடையே அது ஈகோ ப்ரச்சனையாக மாறி விடும். குறிப்பாக ஷீலா மற்றும் ஹரிஷ் தம்பதியினரை கடுமையாக முறைத்து விட்டு நகர்வார் மதன்.
அதன் பிறகு காதல் தம்பதியரான ஷீலாவின் பெற்றோர் பத்து வருடத்திற்கு பிறகு மனம் மாறி வீட்டிற்கு வரப்போவதாகவ தகவல்கள் வருகிறது.
இதனிடையே ஷீலாவின் வீட்டில் எதிர்பாராதவிதமாக ஒரு திருடனின் மரணம் நிகழ்கிறது… பெற்றோருக்கான தடபுடல் ஏற்பாடுகள் ஒருபுறம், பாடியை மறைக்க நினைப்பது ஒருபுறம் என தம்பதிகள் பயந்து நடுங்கி கொண்டிருக்கும் வேளையில் , இன்ஸ்பெக்டர் மதன் சக போலீசாரோடு காலிங்பெல்லை அழுத்த ஹரீஷ் ஷீலா தம்பதியரை போலவே நமது இதய துடிப்பும் பயமும் ஹைடெசிபலுக்கு மாறுகிறது..
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதை வெகுசுவராஸ்யமாக நகர்த்தியுள்ளார் இயக்குனரும் நடிகருமான மதன்.
மலையாள திரைப்பட பாணியில் ஈகோ ப்ரச்சனையை கதைக்களமாக மிக திறன்பட கையாண்டதற்கே இயக்குனருக்கு பாராட்டை தெரிவிக்கலாம்..
ஹரிஷ் உத்தமன் , ஷீலா மற்றும் மதன் அவர்களின் நடிப்பு திறனை நாம் ஏற்கெனவே அறிந்தது தான். ஆனால் வக்கீலாக வரும் நடிகரும் , மேல் வீட்டு நண்பராக வருபவரும், சக குடியிருப்புவாசிகள் , குழந்தைகள் என அனைவருமே கச்சிதமான மற்றும் யதார்த்தான நடிப்பில் நம்மை கவர்கிறார்கள்.. ஷீலா ஹரிஷின் குழந்தையாக வரும் குட்டியும் நம்மை வெகுவாக கவர்கிறது.
ஒரே வீட்டில் கொஞ்சமான கதாபாத்திரங்களோடு வெகு சுவாரஸ்யமாக போரடிக்காமல் கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குனர் மதன்.
குறைந்த பட்ஜெட் படங்கள் சில திடீரென மக்களை வெகுவாக கவரும். அந்த வரிசையில் “நூடுல்ஸ்” படமும் இருக்கலாம்.
நூடுல்ஸில் மெல்லிய ரொமான்ஸ், அன்பு, காதல், நட்பு மட்டுமல்ல மெல்லிய நகைச்சுவையும் கதையோடு இழையோடி புன்சிரிப்பை வரவழைக்கிறது.
மொத்தத்தில் லோ பட்ஜெட்டில் ஒரு ஹைபை படம் இது .. மக்களிடையே அதிக வரவேற்பினை பெற வாய்ப்புள்ளது..
இயக்குனருக்கு வைக்க ஒரே கேள்வி படத்தின் தலைப்பு? படத்தில் நூடுல்ஸ் கூட யாரும் சாப்பிடவில்லை.. அப்புறம் எப்படி என்பவர்களுக்கு… இடியாப்பம் மட்டுமல்ல நூடுல்ஸ்ஸூம் சிக்கல் தான் என சொல்லாமல் சொல்கிறாரா மதன் தட்ஷிணாமூர்த்தி…!