பிக்பாஸூக்காக நிறுத்தப்பட இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸூக்காக நிறுத்தப்பட இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 3 தொடர்கள் முடிவுக்கு வரப்போவதாக மீண்டும் ஒரு தகவல் வலம் வருகிறது. அது என்ன சீரியல்கள் தெரியுமா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்போரின் விருப்பமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக பிக்பாஸ் இருந்து வருகிறது. தமிழிலும் 6 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியை எல்லா சீசனிலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கான ப்ரோமோக்கள் விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது வருமென பிக்பாஸ் ரசிகர்கள் , பிக்பாஸ் ரிவ்யூவர்கள், யூடுப்பர்கள் என பல தரப்பினரும் காத்து கிடக்கின்றனர்.
பின்வரும் சீரியல்கள் விஐய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா சீசன்  2 மற்றும் காற்றுக்கென்ன வேலி தொடர்கள் தான் முடிவுக்கு வருகிறதாம். இந்த சீரியல் ரசிகர்கள் கவலையில் உள்ளனராம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...