“ கார்கி ” படத்தில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி மரணம்!

தமிழ் திரைப்படத்துறையில் பிரபலமாக இருந்த தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்குனர் சந்தான பாரதியின் சகோதரருமான ஆர்.எஸ்.சிவாஜி. தன்னுடைய 66 வயதில் இன்று காலை 7 மணியளவில் உயிரிழந்தார்.

இவர் மது மலர், மீண்டும் ஒரு காதல் கதை, விக்ரம், அபூர்வசகோதரர்கள், குணா, வியட்நாம் காலனி, பவித்ரா, வில்லன், அன்பே சிவம், கோலமாவு கோகிலா மற்றும் கார்க்கி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் முக்கிய வேடங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். சின்னத்திரைகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இணையதள தொடரிலும் நடித்து வந்துள்ளார். தன்னுடைய எதார்த்தமான நேர்த்தியான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

நேற்று (01.09.23) மாலை நடந்த உலக சினிமா விழா துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் திடீர் என இன்று உயிரிழந்துள்ளது ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் நடிக நடிகைகள் திரைத்துறை ப்ரபலங்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!