இந்த நாள் இனிய நாள் இன்றைய ராசி பலன் ஞாயிற் றுக்கிழமை 03 செப்டம்பர் 2023)

 இந்த நாள் இனிய நாள் இன்றைய ராசி பலன் ஞாயிற் றுக்கிழமை 03 செப்டம்பர் 2023)

சோபகிருது வருடம் ஆவணி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.9.2023 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.42 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி இன்று மாலை 04.24 வரை ரேவதி. பிறகு அஸ்வினி. பூரம் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் : இன்று கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் இதில் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டியிருக்கும். பொழுதுபோக்கிற்கென சிறிது நேரமே ஒதுக்க வேண்டியிருக்கும். நீங்கள் இன்று அமைதியாக இருக்கவேண்டும். நீங்கள் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் காணப்படும். உங்களின் அஜாக்கிரதை காரணமாக இன்று பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

ரிஷபம் : இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். இனிமையான வார்த்தைகள் மூலம் நீங்கள் பலனடைவீர்கள். இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளரும். பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க சாத்தியமாகலாம். நீங்கள் உங்கள் மன உறுதியால் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். நிதியில் ஸ்திரத்தன்மை காணப்படும். உங்கள் சொத்து அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம் :  இன்று உங்கள் மனதில் தெளிவு காணப்படும். இதனால் உங்கள் செயல்களை திறமையாக ஆற்றுவீர்கள். பொருத்தமான செயல்களை செய்து உங்கள் நிலையை மேம்படுத்துவீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு பல நல்ல பலன்களை அளிக்கும். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பதவி உயர்வு கிடைக்கும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கடகம் : இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்வதன் மூலம் அமைதியை உணர்வீர்கள். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலை அளிக்கும். இரவில் தூக்கமின்மை காணப்படும். நீங்கள் சிறந்த பலனைக் காண மிகக் கடினமாக உழைக்க வேண்டும். நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது.

சிம்மம் : இன்று அதிருப்தியான நிலை காணப்படும். அனுசரணையான போக்கு உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். சிறந்த பலன் காண உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்காக நீங்கள் திட்டமிட வேண்டும். பணியில் கவனமாக இருப்பதன் மூலம் தவறுகள் நேராமல் தவிர்க்கலாம். பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.

கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். பல வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும். நீங்கள் பொறுப்புடனும் சிரத்தையுடனும் பணியாற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். இன்று நிதிநிலைமை சீராக இருக்கும். பணத்தை நீங்கள் பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

துலாம் : இன்றைய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாகவும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள போதுமானதாகவும் இருக்கும். உங்களின் தைரியமான மனநிலை காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று செயல்கள் சீராக நடக்க சாதகமாக இருக்காது. இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படாது.

தனுசு  :   இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. நீங்கள் சமநிலை இழப்பீர்கள். நற்பலன்கள் காண எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் இன்று சிறந்த பலன் அளிக்காது. இன்று அதிகப் பணிகள் காணப்படும். பணிகள் சலிப்பூட்டுவதாக இருக்கும். நீங்கள் சிறந்த பணி மாற்றம் விரும்புவீர்கள். அதிக செலவுகள் செய்ய நேரலாம்.


மகரம்
:  இன்று சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். முக்கிய இலக்குகளை அடைய திட்டமிடலாம். நீங்கள் எதிர்பார்த்ததை விட இன்று அதிகம் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் அதிக வாய்ப்புகள் காணப்படும். உங்களின் சேமிப்பு ஆற்றல் சிறந்த முறையில் அதிகரிக்கும். இன்று உங்களிடம் சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.

கும்பம் : இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. அஜாக்கிரதை மற்றும் கவனமின்மை காரணமாக உங்களுக்கு வளர்ச்சி அளிக்கும் சில மதிப்பு மிக்க வாய்ப்புகளை இழப்பீர்கள். பணியிடத்தில் வெற்றிகள் அதிக அளவில் காணப்படாது. இன்று வீணான செலவுகள் காணப்படும். இன்று ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது.

மீனம் : இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது. பதட்டமான சூழ்நிலை கவலை அளிக்கும். நீங்கள் சில தடைகளை சந்திப்பீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். சிறந்த வளர்ச்சி காண திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்று நிதிக் கட்டுப்பாடு காணப்படும். இன்று கூடுதல் செலவுகள் செய்ய நேரும். அதிகப் பணிகளால் மகிழ்ச்சி குறையும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...