“நிலவில் இடத்தை வாங்கிய இந்தியர்..”

 “நிலவில் இடத்தை வாங்கிய இந்தியர்..”

நிலவில் சொந்தமாக இடம் வாங்க முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் நிலையில், சந்திரயான் கால் பதித்ததுமே ஜம்மு காஷ்மீரை சேர்ந்த நபர் ஒருவர் நிலவில் சொந்தமாக இடம் வாங்கியுள்ளார்.கடந்த ஒரு வார காலமாகவே நிலவு குறித்த பேச்சுக்கள் அதிகரித்து உள்ளது. அதுவும் சந்திராயான் விண்கலம் நிலவின் தென் துருவத்தில் கால் பாதித்தது மனித குலத்தில் வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாகவே இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவிலும் நிலவு குறித்த செய்திகளே ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த சூழலில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஒரு தொழில் அதிபர் நிலவில் சொந்தமாக ஒரு இடைத்தை வளைத்து போட்டுள்ளாராம்..

என்னது அப்படி என புருவத்தை உயர்த்தி பார்ப்பது புரிகிறது. ஆனால், இது உண்மைதாங்க… நிலவில் , Tract 55-Parcel 10772 லாகஸ் ஃபெலிசிடாடிஸ் (மகிழ்ச்சியின் ஏரி) என்ற இடத்தில் தான் தனக்கு சொந்தமான ஒரு இடத்தை வாங்கி போட்டுள்ளாராம் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபரான ரூபேஷ் மேசன். 49 வயதான ரூபேஷ் மேசன் கல்வி நிறுவனங்களையும் ஜம்மு காஷ்மீரில் நடத்தி வருகிறார். சந்திரயான் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்து வரலாற்று சாதனை படைத்த இரண்டு தினங்கள் கழித்து நிலவில் இடத்தை வாங்கி போட்டுள்ளார். ஏன் நிலவில் ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது என்பது குறித்து கேட்ட போது, நிலவில் என்னதான் இருக்கிறது என்பது தொடர்பான மனிதனின் ஒரு ஆர்வம் தான் இதற்கான முதல் தூண்டுகோல் என்று சொல்லியிருக்கிறார்.

675 பேர் வாங்கியிருக்கிறார்கள்: சந்திரனில் என்ன இருக்கிறது என்ற தேடலின் ஒரு பிரதிபலிப்பாக அங்கு ஒரு இடத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு காரணம்” என்றார். நியூயார்க்கில் உள்ள லுனார் ரிஜிஸ்டரி அதிகாரப்பூர்வமாக நிலத்தை வாங்கியதற்கான சான்றிதழை ஆகஸ்ட் 25 ஆம் தேதி மேசனுக்கு வழங்கியுள்ளது. நிலவில் இப்படி நிலம் வாங்கியிருப்பது இதுதான் முதல் முறை என்று நினைத்து விடாதீர்கள். ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் உள்பட 675 பிரபலங்கள் நிலவு மட்டுமின்றி பிற கிரகங்களிலும் நிலத்தை வளைத்து போட்டுளார்கர்கள் என்று மேசன் சொல்லியிருக்கிறார். மேசன் மேலும் கூறுகையில், “பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியில் ஒரு நிச்சயமில்லாத சூழல் நிலவுகிறது. இது போன்ற தருணங்களில் மனிதர்களுக்கு நிலவுதான் ஒரு அடைக்கலம் நாடும் இடமாக கூட அமையலாம்” என்றார்.

நம்மால் வாங்க முடியுமா?: சரி இப்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். என்னாலும் நிலவில் ஒரு இடத்தை வாங்க முடியுமா? நீங்கள் அப்படி நிலவில் இடத்தை வாங்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது தொழில் அதிபர் மேசனை போல லுனார் ரிஜிஸ்டரி போன்ற அமைப்புகளிடம் போய் வாங்கிக் கொள்ள முடியும். தற்போது நிலவின் Lacus Felicitates பகுதியில் ஒரு ஏக்கர் இடம் $29.07 ஆக விற்பனையாகிறதாம். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ₹2,405 ஆகும். ஆனால் உடனடியாக இந்த இடம் கிடைத்து விடாது. நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

என்னதான் நிலவில் இடத்தை வாங்கி போட்டு இருப்பதாக பல்வேறு விதமான கதைகளை சொன்னாலும் 1967 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வெளிப்புற விண்வெளி ஒப்பந்தத்தின் படி, எந்த ஒரு நாடோ அல்லது நபரோ சட்டப்பூர்வமாக சொந்தமாக செயற்கைக்கோள் அல்லது கிரகத்திற்கோ உரிமை கொண்டாட முடியாது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உள்பட 110 நாடுகள் கையெழுத்திட்டு இருக்கின்றன.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...