“ கிக்” கே இல்லாத “கிக்”…! திரைவிமர்சனம்..| தனுஜா ஜெயராமன்
நடிகர் சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கி , செப்-1 அன்று வெளியாகி உள்ள படம் தான் “கிக்”
கதாநாயகி தான்யா ஹோப், அவருடன் தம்பி ராமையா, கோவைசரளா, பிரம்மானந்தா, மனோபாலா, மஞ்சூர் அலிகான் போன்ற காமெடி நட்சத்திர பட்டாளங்கள்.
நாயகன் சந்தானம் நாயகி தான்யா இருவரும் விளம்பர கம்பெனியில் வேலை செய்கிறார்கள். இருவருக்கும விளம்பரம் பிடிப்பதில் போட்டா போட்டிகள் தான் தினமும்.
சந்தானம் ஒரு கோல்மால் ஊழியர். ஒரு கார் விளம்பரத்திற்காக சந்தானம் சில கோக்குமாக்கு செய்து விளம்பரம் பிடிக்கிறார்.இதனால் கடுப்பான தான்யா கவுன்சிலில் புகார் கொடுக்கிறார்.
அதன்பின் தான்யாவை நேரில் பார்க்கும் சந்தானம் அவர் மீது காதல் வயப்படுகிறார். தான்யாவிடம் சந்தோஷ் என்ற பெயரை மகிழன் என கோல்மால் செய்து காதலிக்கிறார், தான்யாவிற்கு காதல் வர வைக்கிறார் .
தான்யாவை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கும் சந்தானம், ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிவிட முயற்சிக்கும் நேரத்தில், தான் ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார் தான்யா . அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.
இதனை பல காமெடி நட்சத்திர பட்டாளங்களோடு நகைச்சுவையாக சொல்ல முயல்கிறார் இயக்குனர். ஆனால் பார்ப்பவர்களுக்கு நகைச்சுவை வருகிறதா? என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
ப்ளாக் காமெடி இரட்டை அர்த்த வசனம் என படம் நெடுகிலும் வந்தாலும் கிச்சு கிச்சு கூட மூட்டவில்லை எனலாம்.
ப்ளாக்பஸ்டர் ப்ராடக்ட் என படத்தில் பெயர் வைத்தாலே படம் ப்ளாக்பஸ்டர் என படக்குழுவினரை யாரோ பலமாக நம்ப வைத்திருப்பது போல தோன்றுகிறது. கதை , பாடல்கள் என எதுவும் சோபிக்கவில்லை.
கதாநாயகன் உட்பட பல காமெடி பட்டாளம் இருந்தும் “கிக்”கே இல்லாத “கிக்”….!!!!