பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலமா? | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸ் பட்டியலில் இந்த ப்ரபலமா? | தனுஜா ஜெயராமன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்களின் விவரம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். உலகளவில் பேமஸ் ஆன இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தான் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுக சீசனே வேறலெவலில் ஹிட் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக வரப்போகும் பிரபலங்களின் பெயர்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர்போன நடிகர் பயில்வான் ரங்கநாதன் பிக் பாஸ் வருகிறார் என தகவல் சமீபத்தில் பரவியது. இந்நிலையில் இது பற்றி பயில்வான் விளக்கம் கொடுத்து இருக்கிறார். “பிக் பாஸ் போனால் சண்டை போட வேண்டும், லவ் பண்ணனும்.” “அது சரிப்படாது. அதனால் விஜய் டிவி எவ்வளவு காசு கொடுத்தாலும் நான் பிக் பாஸ் செல்ல மாட்டேன்” என கூறி இருக்கிறார்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...