சுந்தரி 2 வரப்போகிறதாம்…! |தனுஜா ஜெயராமன்

 சுந்தரி 2 வரப்போகிறதாம்…! |தனுஜா ஜெயராமன்

சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் காப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். இது சீரியல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்புனை பெற்று இருந்த்து. இந்த சீரியலை இயக்குனர் அழகர் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட இந்த சீரியல் 800 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சுந்தரி சீரியல் முடிவடைந்ததும் இரண்டாவது சீசன் தொடங்கப்படுகிறது என்ற செய்திகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அதிலும் கதாநாயகனாக சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் கேரக்டரில் நடித்த கிருஷ்ணா தான் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணா நடிகை சாயா சிங்கின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல நடிகர் கிருஷ்ணாவிற்கு தெய்வமகள் சீரியலுக்கு பிறகு வந்த வாய்ப்புகள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் சுந்தரி 2 சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்தோடு இருந்து இவருடைய நடிப்புக்கும் மீண்டும் வெற்றி கிடைக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதுபோலத்தான் சுந்தரி சீரியலில் கதைக்களமும் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. சுந்தரியின் கணவர் அவருடைய காதலியை சுந்தரிக்கு தெரியாமல் திருமணம் செய்து அவருக்கு இப்போது பெண் குழந்தையும் பிறந்து இருக்கிறது. சுந்தரி கிராமத்தில் இருக்கும் போது பல அவமானங்களை தாண்டி தான் ஒரு கலெக்டராக வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய நிறத்தை காட்டி அவமானங்களை படும்போது ஆரம்பத்தில் சுந்தரிக்கு உதவியாக இருந்தது அனுதான். ஒரு கட்டத்தில் சுந்தரியின் கணவர் கார்த்திக் சுந்தரியை அனுவிடமிருந்து பிரித்து பல பிரச்சனைகள் நடந்து வந்தது. அதையெல்லாம் தாண்டி இப்போது அனுவிற்கு சுந்தரி பற்றிய உண்மைகள் தெரிய வந்திருக்கிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...