இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து !
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் பல்வேறு ப்ரச்சனைகள் தினமும் ஏற்படுவது வழக்கமாகி வருகிறது… தொடரும் சர்ச்சைகளாலும் சண்டைகளாலும் இத்தகைய ப்ரச்சனைகள் எழுவதாக பலரும் குற்றஞ்சாட்டு வைக்கின்றனர்.
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாமல் இருந்ததால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ரத்து காரணமாக மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு மே.30-ல் கடிதம் எழுதி இருந்தது.
ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டிய நிலையில் வீரர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தை தற்காலிகமாக சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பு ரத்து செய்தது.
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.
ஜனவரி, மே மாதங்களிலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.