தூத்துக்குடியில் உதயநிதி தலைமையில் ஆய்வு கூட்டம்..!
வரும் 14ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி செல்ல உள்ளார். மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அவர் செல்ல உள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பி ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என அரசின் செயலாளர் டேரஸ் அகமது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது, உதயநிதி தலைமையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியை கலந்து கொள்ள வரச் சொல்லி இருக்கிறார். ஏனைய மாவட்டங்களில் இல்லாத இந்த அழைப்பு திமுகவினரையே அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, கொள்கைகளில் தீவிரமாக இருப்பவர், கட்சியினர் மற்றும் பொது மக்களை எளிதில் அணுகக்கூடியவர் என்ற இமேஜை கொண்டிருப்பவர் கனிமொழி.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, கனிமொழி ஓரங்கட்டப்படுவதாக திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. கருணாநிதியின் அரசியல் வாரிசாக கனிமொழி கருதப்பட்டாலும், கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்கான முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என அவரது ஆதரவாளர்கள் குமுறி வரும் சூழலில் ‘துமு ஒரு கால் செய்து சொல்ல வேண்டியதை இப்படி செகரட்டரி லட்டர் எழுதி அதையும் சோசியல் மீடியாவில் மீடியாவில் பரவ விட்டிருப்பது சலசலைப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்