அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கியது..!
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மாகாணவாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மேலும், அந்நாட்டு சட்டப்படி நவம்பர் முதல் செவ்வாய்க்கிழமையன்றுதான் அதிபர் தேர்தல் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்த தேர்தலில், ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதனைத்தொடர்ந்து, இன்று காலை 5.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்ட 3 மாகாணங்களில் 2 மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்தான் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் 54 சதவிகிதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 44 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.