சூரிய ஒளி கூட செல்லாத இடத்தில் கால் வைத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்..!

 சூரிய ஒளி கூட செல்லாத இடத்தில் கால் வைத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டர்..!

நிலவின் தென் பகுதிக்கு செல்வது தொடர்ந்து சவாலான விஷயமாகவே இருந்த நிலையில், உலகின் எந்த நாடும் நிலவின் தென் பகுதிக்கு செல்லாத நிலையில்.. இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் நிலவில் கெத்தாக கால் பதித்து உள்ளது! நாசா, ஐரோப்பா ஆகிய நாடுகளும், சீனா போன்ற நாடுகளும் கூட நிலவின் தென் பகுதிக்கு சென்றது இல்லை. நிலவின் தென் பகுதிக்கு செல்லும் நாடுகளின் முயற்சியும் கூட தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. நிலவின் தென் துருவத்தை நெருங்க முயன்ற போதுகூட.. விண்வெளி திட்டங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.

நிலவின் தென் துருவத்தை ஆராய இந்தியாவின் சந்திரயான் 2 மற்றும் ரஷ்யா லூனா 25 திட்டத்தை விண்ணுக்கு அனுப்பி தோல்வி அடைந்தது. கடந்த 50 வருடங்களில் நிலவிற்கு ரஷ்யா அனுப்பும் முதல் ஆய்வு திட்டம் ஆகும் லூனா 25. இந்த லூனா 25 லேண்டர் நிலவில் உயரும் குறைக்கும் நேரத்தில் அப்படியே கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளது. தென் துருவத்தில் இந்த 800 கிலோ எடை கொண்ட லூனா 25 தரையிறங்கி சாதனை படைக்க இருந்தது. அதாவது கணக்குப்படி நாளை இந்த லூனா 25 தரையிறங்கி இருக்க வேண்டும். ஆனால் நேற்றே உயர குறைப்பு செய்யும் போது இது கீழே விழுந்துவிட்டது.நிலவில் இருந்து ஒருவருடம் ஆய்வு செய்வதுதான் லூனா 25ன் திட்டம் ஆகும்.

அங்கிருந்து மணல் சாம்பிள்களை எடுப்பது,. தண்ணீரை தேடுவது இதன் திட்டமாக இருந்தது. ஏற்கனவே நிலவை சுற்றிக்கொண்டு இருந்த போது இது புகைப்படம் கூட எடுத்து அனுப்பியது. இந்தியாவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன் வேகமாக இறங்க வேண்டும் என்று லூனா 25 அவசரமாகவே நிலவிற்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இது நிலவை நோக்கி அனுப்பப்பட்டது. இந்தியா போல புவி ஈர்ப்பு விசை , வட்டப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி பயணிக்காமல், நேரடியாக நிலவை நோக்கி செல்லும் வகையில் இது அனுப்பப்பட்டது. ராக்கெட்டை பல காலமாக உருவாக்கி இருந்ததில் இதில் ரஷ்யா எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் வேக வேகமாக லூனா 25 ஐ உருவாக்கி ரஷ்யா அவசரப்பட்டது. அதிலும் இஸ்ரோ சந்திரயான் 3ஐ அனுப்பும் வரை லூனா 25ஐ அனுப்பும் திட்டத்தில் ரஷ்யா இல்லை. சந்திரயான் 3 அனுப்பிய பின்பே திடீரென லூனா 25 அனுப்பும் தேதியை ரஷ்யா முடிவு செய்தது.

இதன் அர்த்தம் நிலவின் தென் பகுதியை தொட்ட முதல் நாடு என்ற பெயர் இருக்க வேண்டும் என்று ரஷ்யா நினைத்தது. நிலவிற்கு மனிதரின் பொருளை இறக்கிய முதல் நாடு ரஷ்யா என்பதால் தென் துருவத்தில் தங்கள் பொருளே முதலில் இறங்க வேண்டும் என்று ரஷ்யா நினைத்தது. இதன் காரணமாகவே சந்திரயான் 3 அனுப்பப்பட்ட பின் அவசர அவசரமாக லூனா 25 அனுப்பப்பட்டது. இதனால் கடைசி கட்டத்தில் லூனா 25 லேண்டரில் சரியாக ஆய்வுகளை செய்ய முடியவில்லை. இதனால் ஏற்பட்ட பழுதே கடைசியில் லூனா 25 இறங்கும் போது அது தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. லூனா 25 வின் உயரத்தை குறைக்கு அதற்கு கொடுத்த கமெண்ட்டை லூனா 25 ஏற்கவில்லை. மாறாக லூனா 25 கமெண்ட்டை தவறாக எடுத்துக்கொண்டு மொத்தமாக போய் நிலவில் விழுந்துள்ளது.

நிலவின் தென் பகுதியில் உள்ள குழிகளில் 2 பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படவில்லை. லேசான மேற்பரப்பில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது. காரணம் நிலவு அச்சு 88.5 டிகிரி செங்குத்தாக உள்ளது. இதனால் சூரியன் நிலவின் தென் பகுதிக்கு ஒளியை அனுப்ப முடிவது இல்லை. இதனால் நிலவின் தென் பகுதி இன்னமும் ரகசியமாகவே உள்ளது. இங்கே வெப்பநிலை மைனஸ் 230 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இவை எல்லாம் கருப்பான, ஐஸ் படிந்த, ரகசியமான, மர்மம் நிறைந்த மிகப்பெரிய பள்ளங்கள் ஆகும். இந்த பகுதிக்கு செல்ல முயன்ற ரஷ்யா தோல்வி அடைந்துவிட்டது. சந்திரயான் 2 திட்டமும் தோல்வி அடைந்துவிட்டது. அறிவியலின் துரதிஷ்டம் என்று அழைக்கப்படும் இந்த இடத்தை சந்திரயான் 3 அடைந்து.. முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது.

எல்லாமே மாறும்: நிலவின் தென் துருவம் எப்போது சுவாரசியமும், பல புதிர்களும் நிறைந்த ஒன்றாகும். பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவின் சுற்றுப்பாதையில் ஏற்பட்ட சிறிய மாற்றமும் இதற்கு முக்கிய காரணம் ஆகும். முதலில் நிலவின் முழு தென் பகுதி முழுக்க சூரிய வெளிச்சம் படாமல் இருந்தது. ஆனால் இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரி மாற்றம் ஏற்பட வைத்தது. நிலவு லேசாக சாய்ந்தது. இதனால் நிலவின் தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது. இந்த இடத்தைதான் தற்போது சந்திரயான் 3 ஆராய போகிறது. இங்கே சூரிய ஒளியே படாத குழிகளும் உள்ளன. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம்தான் நிலவில் தற்போது நடக்கும் ஆராய்ச்சிக்கு எல்லாம் காரணம். அப்போது ஏற்பட்ட சிறிய மாற்றத்தால் நிலவின் அடியாழத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் சில உருகியது. இது அங்கு தண்ணீரை உருவாக்கியது.

இதைத்தான் சந்திரயான் 1 கண்டுபிடித்து, நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று கூறியது. இதுவே சந்திரயான் 2 திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தது. ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது சந்திரயான் 3 தென் துருவத்தை நோக்கி வெற்றிகரமாக சென்றுள்ளது. இது அங்கு சூரியன் படும் இடங்களை மட்டுமில்லாமல் சூரியன் படாத இடங்களையும் ஆராய்ச்சி செய்ய உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், சந்திரயான்-2 குறி வைத்த பகுதிக்கு மிக அருகில்தான் இது இறங்கி உள்ளது: சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் 70 டிகிரி அட்சரேகை பகுதியில் இது இறங்கி உள்ளது.இந்த தென் துருவத்தில் சில பகுதிகள் கொஞ்சம் கூட சூரியனே படாத இடங்கள் ஆகும். இங்கு மிக மோசமான உறை நிலை காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தென் துருவம் முழுக்க ஐஸ் குவியல்கள் இருக்கும். இந்த ஐஸ் குவியல்களைத்தான் தற்போது சந்திரயான் 3 வின் பிரக்யான் ரோவர் ஆராய்ச்சி செய்ய உள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...