பூத்திருக்கும் விழியெடுத்து – 5 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 5 | முகில் தினகரன்

 

அத்தியாயம் 5

துரையில் நடைபெறும் மாநிலங்களுக்கு இடையிலான அந்த நடனப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தன் குழுவினரை ஒரு நாள் முன்னதாகவே அழைத்து வந்திருந்தாள் வைசாலி.

நடனப் போட்டி நடத்திக் கொள்ள தனது ஆடிட்டோரியத்தை வழங்கியிருந்த “ராம்ராஜ் கல்லூரி”யின் விஸ்தாரத்தையும், ஆடிட்டோரியத்தின் ஆடம்பரத்தையும் பார்த்த மாணவ மாணவிகள் மூக்கின் மேல் விரலை வைத்தனர்.

 “மேடம்… இந்தக் காலேஜையும், ஆடிட்டோரியத்தையும் பார்க்கும் போதே தெரியுது இங்க அட்மிஷன் வாங்கறதும் கஷ்டம், வாங்கினாலும் ஃபீஸ் கட்டறதும் கஷ்டம்!ன்னு…” ஒரு மாணவி வைசாலியிடம் சொல்ல,

 “இல்லை லதா… இந்தக் காலேஜ் ஒரு மந்திரியோட பினாமி காலேஜ்…. அதனாலதான் இத்தனை ஆடம்பரமா இருக்கு” இன்னொரு மாணவி அதற்கு பதில் சொன்னாள்.

“ஏய்… இது யார் காலேஜா இருந்தா என்ன…? நாம என்ன இந்தக் காலேஜை விலைக்கு வாங்கவா வந்திருக்கோம்?…நம்ம லட்சியம் இப்போதைக்கு ஒண்ணே ஒண்ணுதான்… டான்ஸ் போட்டில கலந்துக்கறோம்… பட்டையைக் கிளப்பறோம்… கோப்பையைப் பிடிக்கறோம்… அவ்வளவுதான்!… என்ன?… புரியுதா?” என்றாள் வைசாலி.

டான்ஸ் போட்டி முடியும் வரை அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களின் கவனம் வேறெந்த சிந்தனையிலும் சிதறக் கூடாது என்பதில் குறியாயிருந்தாள் அவள்.

அப்போது அவர்களை நோக்கி வந்த டை கட்டிய இளைஞன், “மேடம்… நீங்க எந்தக் காலேஜ்ன்னு தெரிஞ்சுக்கலாமா?” கேட்க,

அவன் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையில் “ஜி.மதுசூதனன், தன்னார்வப் பணியாளர், ராமராஜ் கல்லூரி” என்று பொறிக்கப்பட்டிருந்தது.

 “விசாகா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், திருச்சி”

தன் கையிலிருந்த காகிதங்களைப் புரட்டிப் பார்த்து விட்டு, “மேடம்… நீங்க லெப்ட் சைடுல இருக்கற பில்டிங்கிற்குப் போங்க… செகண்ட் ஃப்ளோர்ல… ரூம் நெம்பர் 221, இரண்டாம் ஆண்டு சைக்காலஜி வகுப்பு… உங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கு… அங்க போய் ஸ்டே பண்ணிக்கங்க… டாய்லெட் பாத்ரூம் வசதியெல்லாம் அங்கியே இருக்கு… சாப்பிட மட்டும் கீழே கேண்டீனுக்கு வந்திடுங்க” என்றான்.

 “தேங்க் யூ” சொல்லி விட்டு தன் குழுவினரை அழைத்துக் கொண்டு அந்தக் கட்டிடத்தைச் நோக்கிச் சென்றாள் வைசாலி.

நெற்றியில் “மதர்ஸ் இண்டியா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி, கோயமுத்தூர்” என்று பெயரிடப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்து ராமராஜ் கல்லூரியின் விஸ்தாரமான கேட்டிற்குள் நுழைந்து, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்களுக்கு மத்தியில் நின்றது.

அசோக் முதலில் இறங்க அவனைத் தொடர்ந்து மாணவர்களும், மாணவிகளும் இறங்கினர்.

அவர்களுக்காகவே காத்திருந்தவன் போல் அவர்களை நோக்கிச் சென்ற தன்னார்வ இளைஞன், “கோயமுத்தூர் மதர்ஸ் இண்டியா காலேஜா சார்?” கேட்டான்.

அசோக் பதில் பேசாமல் தாங்கள் வந்திறங்கிய பேருந்தைக் காட்ட, அவன் சிரித்துக் கொண்டே, “அதோ லெப்ட் சைடுல இருக்கற அந்த பில்டிங்கிற்குப் போங்க சார்… செகண்ட் ஃப்ளோர்ல… ரூம் நெம்பர் 222, மூன்றாம் ஆண்டு சைக்காலஜி வகுப்பு…அதுதான் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம்!… அங்க போய் ஸ்டே பண்ணிக்கங்க!… எல்லா வசதிகளும் அங்கே இருக்கு!… கேண்டீன் கீழே இருக்கு” என்றான்.

 “ஹேய்ய்ய்ய்” என்று கத்திக் கொண்டு மாணவக் கூட்டாம் முன்னே ஓட, புன்னகை முகத்துடன் அவர்களைப் பின் தொடர்ந்தான் அசோக்.

பாவம், அந்தப் புன்னகைக்கு அல்பாயுசு என்பது அப்போது அவனுக்குத் தெரியாது.

டேய்….அசோக்!… என் வாழ்க்கைல உன்னைய மாதிரி ஒரு பச்சைத் துரோகியை நான் பார்த்ததே இல்லை…. ச்சை!… உன்னைப் போய் லவ் பண்ணினேன் பாருஎன்னை….”

  ஏய்வைசாலிஎதுக்கு அனாவசியமா என் மேல் கோபப்படறே?”

  நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?…  “உங்க வகுப்பு சார்புல ஆடற ஸ்டூடண்ட்டுக்குநீ டான்ஸ் டிரெய்னிங் தரக் கூடாதுன்னு சொன்னேன் அல்ல?… அப்புறமும் ஏன் குடுத்தே?”

   மை காட்!… நான் அவனுக்கு டிரெய்னிங் குடுக்கவே இல்லை வைசாலி

  நோநீ பொய் சொல்றே?… நேத்திக்கு அவன் தனியா பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தப்ப நான் போய் மறைஞ்சு நின்னு பார்த்தேன்….அவனோட டான்ஸ் மூவ்மெண்டெல்லாம் அப்படியே அட்சரம் பிசகாம உன்னோட மூவ்மெண்ட்ஸ் மாதிரியே இருந்தது!… கான்ஸெப்ட் கூட நீ செலக்ட் பண்ணிக் குடுத்த மாதிரியே சைக்காலஜி டச்சா இருந்தது!…இதை விட வேறென்ன ஆதாரம் வேணும்

  வைசாலிஎன்னை நம்புபிராமிஸா நான் அவனுக்கு டிரெய்னிங் குடுக்கலைம்மா

  இதுக்கு மேலேயும் உன்னோட பொய்யை நம்ப நான் தயாரில்லை!… நீ என்னைத் தோற்கடிக்க ஆளைத் தயார் பண்ணிட்டிருக்கே!… ஆனா ஒண்ணுநான் தோற்க மாட்டேன்!… ஜெயிப்பேன்…”

  குட்இந்த நம்பிக்கையே போதும்நீ ஜெயிச்சிடுவே

  அதை நீ சொல்ல வேண்டியதில்லை!… நான் ஜெயிப்பேன்னு எனக்குத் தெரியும்!… ஏன்னாநான் ஜெயிப்பதற்காக எந்த லெவலுக்கும் போவேன்!”

  ஏய்…. வாட் டு யூ மீன்?”

  அசோக் இதுக்கு மேலே பேசாதே!… இனிமேல் என் மூஞ்சியிலேயே முழிக்காதே போயிடுபோயிடு

-( மலரும்… )

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...