நண்பன் குழுமம் பி.சி. ஸ்ரீராம் – சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்தது…

 நண்பன் குழுமம் பி.சி. ஸ்ரீராம் – சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்தது…

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்’ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது. ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

ஒரு பெண் அவருடைய வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார். ஆனால் தன் கணவனுடன் செலவிடும் நேரத்தை மட்டும் விட்டுத் தர மாட்டார். இது மிகப் பெரிய விசயம். அந்த வகையில் இந்த நண்பன் குழுமத்தைச் சேர்ந்த அத்தனை நண்பர்களின் மனைவிமார்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இவர்களால்தான் நண்பன் குழுமத்தில் பணியாற்றும் நண்பர்கள் அடுத்தடுத்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்துச் சிந்திக்கிறார்கள்.

நேர்மையாக உழைக்க வேண்டும். நேர்மையாகச் சம்பாதிக்க வேண்டும். எனக்குக் கிடைத்ததை நான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என ஜி கே சொல்வதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நண்பன் – இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக.. எந்தக் கோணத்தில் உதவி செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துச் செயலாற்றுவதற்காகத் தான் அவர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இந்த மேடை கலை மற்றும் கலைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு முக்கியமான மேடை. நண்பன் குழுமம் கலைஞர்களுக்காக உருவாக்கிய அமைப்பின் முதல் நிகழ்வு. இதில் கலந்து கொள்வதற்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் ஆரி அர்ஜுனன்.

அவரைத் தொடர்ந்து நண்பன் குழும நிறுவனர் ஜி கே பேசுகையில், ” இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்களின் ஆதரவு இல்லாமல் இந்த விழா இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றிருக்காது.

அறிவுமதி பேசுகையில், ” என்னுடைய தந்தையார் எனக்கு வைத்த பெயர் மதியழகன். கடலூர் துறைமுகத்தில் பிறந்த என்னுடைய நண்பரின் பெயர் அறிவழகன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எங்களை நண்பர்களாக்கியது. அவர்கள் வீட்டிற்கு நான் பிள்ளையானேன். எங்கள் வீட்டிற்கு அவன் பிள்ளையானான். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எங்களைச் சந்திக்கும் போது, ‘அறிவு மதியை பார்த்தீர்களா.. அறிவு மதியை பார்த்தீர்களா..?’ எனக் கேட்பார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பூத்த எங்கள் நட்பிற்காக நான் சூட்டிக்கொண்ட பெயர் தான் அறிவுமதி. அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து நண்பன் என்ற சொல்லை நண்பனிசம் என்ற சொல்லாக… அழகாக மாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அது உங்கள் உள்ளத்தின் அழகு மட்டுமல்ல.. எங்கள் தொன்மத்தின் அழகும் கூட. “அண்ணனை விடவா ஒசத்தி என் நண்பன் எனக்கேட்டாள் அம்மா.. உன்னை விடவும் என்றேன் நான்.” என்றார்.

விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பேசுகையில், ” இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது நண்பன் என்ற ஆரோக்கியமான இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று. எனக்கு அளிக்கப்பட்ட விருது, இனி நான் செய்யவிருக்கும் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் நன்றி ” என்றார்.

விருது பெற்ற கலை இயக்குநர் டி முத்துராஜ் பேசுகையில், ‘ நிறைய செலவழித்து என்னைத் தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் மிகப்பெரிய மேதை. கோயம்புத்தூர் பல்லவி தியேட்டரில் ‘இதயத்தைத் திருடாதே’ படத்தில் அவர் பெயர் திரையில் தோன்றும் போது, மேடை ஏறி ஆடி இருக்கிறேன். பிறகு அவருடன் இணைந்து பணியாற்றிய போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது அவருடன் இணைந்து விருது பெறுவதும் சந்தோஷம்.” என்றார் .

இயக்குநர் சேரன் பேசுகையில், ” நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும். சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது பி.சி. ஸ்ரீராம் சொன்னது போல், அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறோம். நண்பன் குழுமம் அனைவருடனும் இணைந்து.. தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குநர் பாக்யராஜ்.ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் சேரன், கலை இயக்குநர் முத்துராஜ், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னதாக கலை மற்றும் பண்பாட்டு துறையில் சிறந்த சேவை செய்துவரும் கலைஞர்களான ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, பேராசிரியர் மு ராமசாமி, கவிஞர் அறிவுமதி, புரிசை கண்ணப்ப சம்பந்தம், பெரிய மேளம் கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு நண்பன் விருது வழங்கப்பட்டது- இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர்.

இவர்களைத் தொடர்ந்து நண்பன் டேலண்ட் கேட்வே விருதினை அறிமுக படைப்பாளிகளான கணேஷ் கே பாபு, விக்னேஷ் ராஜா, விநாயக் சந்தரசேகரன், முத்துக்குமார், மந்திரமூர்த்திக்காக அருவி மதன் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன், நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இயக்குநர் சேரன் ஆகியோர் வழங்கினர். விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ஒரு இலட்ச ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாற்று ஊடக மையத்தைத் சார்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் மேடையில் தோன்றி தமிழ் மண்ணின் தொல்லியல் கலைகளை நிகழ்த்தி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்கள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...