நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த சந்திராயன்-3

 நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த சந்திராயன்-3

நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த சந்திராயன்-3 விண்கலத்திலிருந்து எடுக்கப்பட்ட நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ. கடந்த ஜூலை 14-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வததற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 3 புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 பூமியைச் சுற்றி தனது சுற்றுப்பாதையை படிப்படியாக அதிகரித்து நிலவை நெருங்கி வந்தது.

இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த ஜூலை 26ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி சந்திரயான் 3 விண்கலம், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து உந்தித் தள்ளப்பட்டது.

நேற்று இரவு 7.15 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது சந்திரயான்-3. நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றுள்ள சந்திராயன்-3 விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசையால் இயக்கப்பட்டு வருகிறது. நிலவின் சுற்றுவட்டப்பாதையை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சந்திராயன் 3 விண்கலம் எடுத்த நிலவின் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தில் உள்ள உயர் தொழில்நுட்பக் கேமராவில் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் நேற்று இரவு சென்ற நேரத்தில் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...