போண்டா மணிதான் இன்னும் பேலன்ஸ்.

 போண்டா மணிதான் இன்னும் பேலன்ஸ்.

போண்டா மணிதான் இன்னும் பேலன்ஸ்.. லியோவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

லியோ படத்தில் நடிக்காமல் இன்னும் போண்டா மணியும், போனி கபூரும்தான் இருக்கிறார்கள் என ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதற்கு முன்னதாக அவர் நடித்த பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் சரியாக போகாததன் காரணமாக லியோ படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விஜய் உழைத்துவருகிறார். படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் திருப்பதியில் நடந்துவருகிறது. விரைவில் ஷூட்டிங் முடிந்து மற்ற பணிகள் தொடங்கவிருக்கின்றன. படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள், ஃபர்ஸ்ட் லுக்: கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கு, நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது.ஃபர்ஸ்ட் லுக் வரவேற்பை பெற்ற சூழலில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான நா ரெடியில் இடம்பெற்ற வரிகளும், விஜய் சிகரெட்டை வாயில் வைத்திருந்ததாலும் பிரச்னை கிளம்பியது. இதனையடுத்து மதுவுக்கும், புகைக்கும் எதிரான வசனங்கள் அந்தப் பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகளையும் அந்தப் பாடலிலிருந்து நீக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. குவிந்த பிரபலங்கள்: லியோ படத்தில் பல நடிகர்கள் நடித்துவருகிறார்கள்.

கோலிவுட், பாலிவுட் என பல திரைத்துறைகளிலிருந்து களமிறங்கியுள்ளனர். முதலில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மாத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் என பலர் கமிட்டாகினர். இதோடு லிஸ்ட் நின்றுவிடும் என ரசிகர்கள் யோசித்த சூழலில் மடோனா செபாஸ்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் ஒரு பாடலில் விஜய்க்கு நடனம் ஆடுகிறார் என்றும் தகவல் வெளியாகி ஆச்சரியப்படுத்தியது.

இயக்குநர் படை: அதேபோல் லியோ படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பவர்களில் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இத்தனை இயக்குநர்களை லோகேஷ் கனகராஜ் எப்படித்தான் எந்த பிரச்னையும் இல்லாமல் இயக்குகிறாரோ என்று சமூக வலைதளங்களில் கூறிவந்தனர். அடுத்த இயக்குநர்: படத்தில் ஏற்கனவே மூன்று இயக்குநர்கள் நடிக்கும் சூழலில் நான்காவதாக ஒரு இயக்குநர் இணைந்திருக்கிறார். லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸில் நான் சாக வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்திய இயக்குநர் அனுராக் காஷ்யப்தான் அவர். இத்தனை பேர் நடிக்கும்போது ஸ்க்ரீன் ஸ்பேஸை லோகேஷ் எப்படி தரப்போகிறார் என்பது சுவாரஸ்யம்தான்.

தனுஷ்: இப்படி பல நட்சத்திரங்கள் லியோவில் இருக்க நேற்று லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியானது. அதன்படி நடிகர் தனுஷ் லியோவில் கேமியோ ரோல் செய்யப்போவதாக கூறப்பட்டது. எனவே விக்ரமில் சூர்யா செய்தது போல் இதில் தனுஷாக இருப்பாரோ என ரசிகரக்ள் கேள்வியை எழுப்பினர். இருப்பினும் இந்தத் தகவலில் எவ்வளவு உண்மை என்பது தெரியவில்லை. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் லியோ படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இணைந்திருப்பதற்கும், சில நட்சத்திரங்கள் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்களை வைத்தும் லியோ படக்குழுவை பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கலாயத்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “லியோ படத்தில் இணையாமல் மிச்சம் இருப்பது போண்டா மணியும், போனி கபூரும்தான்” என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் ட்ரெண்டாகியுள்ள சூழலில் ரசிகர்கள் தக்க பதிலடியும் கொடுத்துவருகின்றனர்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...