இனி சென்னை to திருப்பதி வெறும் 75 நிமிடங்களில் சென்று விடலாம்
இனி சென்னை to திருப்பதி வெறும் 75 நிமிடங்களில் சென்று விடலாம் – வந்துவிட்டது வந்தே பாரத்!
உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்ட மக்களுக்கு திருப்பதி அருகாமையில் இருப்பதால் இந்த மாவட்ட மக்கள் அடிக்கடி திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனால் இனி சென்னையிலிருந்து கீழ் திருப்பதிக்கு இனி 1 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்று விடலாம். கூடிய விரைவில் சென்னை சென்டரலில் இருந்து கீழ் திருப்பதிக்கு வந்தே பாரத் சேவை துவங்கப்படவுள்ளது. எப்போது துவங்குகிறது? கட்டணம் எவ்வளவு? எங்கிருந்து செல்ல முடியும்? எத்தனை மணிக்கு ரயில் புறப்படுகிறது? போன்ற தகவல்களை கீழே பார்ப்போம்!
சென்னையிலிருந்து திருப்பதிக்கு அதிக அளவில் செல்லும் பக்தர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களோடு சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் ஆந்திராவை எளிதில் அணுகக்கூடிய அளவில் உள்ளன. அதிலும் வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் ஆந்திராவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. பிற மாவட்ட மக்களை விட இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் அடிக்கடி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் தினசரி அளவு மற்ற மாவட்டங்களை விட மிகவும் அதிகம் என்றே சொல்லலாம்.
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய ரயில் இதுவரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு செல்ல எக்ஸ்பிரஸ் ரயில்களில் மொத்த தொலைவான 151 கிமீ தூரத்தை கடக்க பயண நேரமாக 3 மணி 25 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது. மணிக்கு தோராயமாக 120 கி.மீ எனும் அதிவேகத்தில் செல்லக்கூடிய புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள சென்னை சென்ட்ரல் to திருப்பதி வந்தே பாரத் ரயிலில் 151 கி.மீ தொலைவை வெறும் 1 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது
விரைவில் சென்னை சென்ட்ரல் to திருப்பதி வந்தே பாரத் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஜூலை 7 ஆம் தேதி முதல் அல்லது ஜூலை மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்திலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி திருமலைக்கு சென்று வரும் நிலையில் வந்தே பாரத் சேவை துவங்கவுள்ளதை பக்தர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். என்னப்பா கூட்டத்தையே காணோம் – வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க முடிவு! வெறும் ரூ.398 இல் பயணம் சென்னை சென்ட்ரல் to திருப்பதி வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதிக்கு வெறும் 75 நிமிடங்களில் செல்லும் என்று எதிர்பார்க்கக்கூடிய இந்த அதிவேக ரயிலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு சாதாரண இருக்கைக்கு டிக்கெட் ரூ.398 ஆகவும், எக்சிகியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்ய ரூ.798 கட்டணமும் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.