நடிகை ஐஸ்வர்யா – உமாபதி காதல் மலர்ந்தது எப்படி?
ஆக் ஷன் கிங் நடிகர் அர்ஜுனின் மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதியுடன் விரைவில் திருமண நிச்சயம் செய்யவுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் தம்பி ராமையா. இவரின் மகன்தான் உமாபதி. ஓரிரு படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் தமிழ் சினிமாவில் ஆக் ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு விரையில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இவர்கள் இருவரும் சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். தங்களது காதலைப் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. உமாபதி எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாமல் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால் அர்ஜுனுக்குப் பிடித்துவிட்டது.
நடிகர் அர்ஜுன்–நிவேதிதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். இதில் ஐஸ்வர்யா, விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அடுத்து தமிழ், கன்னடத்தில் உருவான, ‘சொல்லிவிடவா’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இப்போது தந்தை அர்ஜுன் இயக்கத்தில் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்.
அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ராஜாகிளி’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
ஐஸ்வர்யா, உமாபதி இருவரும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றபோது நட்பு ஏற்பட்டு பிறகு காதல் வயப்பட்டு உள்ளனர்.
நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையா பேசும்போது, “அர்ஜுன் சார் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோவில் உமாபதி ஒரு போட்டியாளராக இருந்தார். நடிகர் தம்பி ராமையாவிடம் கேட்டபோது கூறியதாவது: உமாபதியின் திருமணத்துக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பெண் பார்க்கத் தொடங்கினோம். அப்போது, ஐஸ்வர்யாவைக் காதலிப்பதாகச் சொன்னார். நாங்கள் சம்மதித்தோம். அவர்கள் வீட்டிலும் முழு சம்மதம் என்று தெரிந்ததும் கடந்த 19-ம் தேதி அர்ஜுன் வீட்டுக்கு முறைப்படி சென்று பேசினோம். ஐஸ்வர்யா நடிக்கும் தெலுங்குப் படத்தை அர்ஜுன் இயக்கிவருகிறார். அது முடிந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். நவ.8ம் தேதி திருமணத் தேதியை முடிவு செய்வோம். தை மாதம் திருமணம் இருக்கும்.
“சில நாட்களுக்கு முன், அர்ஜுன் சார் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் இரு குடும்பத்தினரும் சந்தித்து மேலும் தொடர முடிவு செய்தோம். மீண்டும் சமீபத்தில் அர்ஜுன் சாரின் வீட்டில் பேசினோம். ஐயாவும் நானும் விரைவில் திருமணத் தேதியை நிர்ணயித்து, நவம்பர் 8ஆம் தேதி உமாபதியின் பிறந்த நாளில் அதிகாரபூர்வமாகப் பகிர்ந்துகொள்வோம்.