கமலின் இதழ் தடம் படியாத மூவர்?

 கமலின் இதழ் தடம் படியாத மூவர்?

“கமலோடு ஜோடியாக நடிக்க முடியாது!” என்று நதியா மறுத்துச் சொன்னதாக மருத்துவக் குறிப்புகள் உண்டு. இன்னொருமுறை ஒரு நடிகை இப்படிச் சொன்னதாகச் சொல்வார்கள். “திரையில் நீங்கள் பார்க்கும்போது அதை ஒரு முத்தக் காட்சியாக எண்ணிக் கொள்வீர்களாயிருக்கும்! உண்மையில் அது ஒரு சாரைப் பாம்புக் கடி! அந்த அனுபவத்தின் நிமித்தம் சொல்கிறேன்!” ‘கமலும் அவர்தம் முத்தங்களும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினால் அதை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வரைக்கும் எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம். அவ்வளவு முத்தங்கள். 

புன்னகை மன்னன் படத்தில் ‘சிவனே’ என்றிருக்கும் ரேகாவை அழைத்துப்போய் அதிரம்பள்ளி அருவியின் உச்சிக்குக் கொண்டுபோய் கன்னியாகச் செத்தால் ஆவியாக வந்துவிடும் அபாயம் இருப்பதாக கிக்கிரிபிக்கிரி செய்துவிட்டு வாயைக் கடித்துக் கீழே தள்ளிக் கொன்று விடுவார். தாம் பிழைத்திருந்தால் இன்னொரு முறை அந்தக் கடிக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில்தான் ரேகா செத்துப் போனார் என்றெல்லாம் மக்கள் பேசிக் கொண்ட காலமும் அதுதான். கமலுக்கு முத்தவும் தெரியவில்லை! சாகவும் தெரியவில்லை! தொங்கத்தான் தெரியும் என்று அவரது ரசிகர்களே அழுத காலங்களும் உண்டு.

கமல் நடித்த ‘ஏக் துஜே கோலியே’ படத்தில் எழுத்துப் பிழைகளோடு இந்தி பேசும் கமல் பக்கத்து வீட்டு மார்வாடிப் பெண் ரதி அக்கினிகோத்தாரியை விளித்து “தேரே பேரே பீச்சுமே” என்று பீச்சாங்கரையில் காதலைப் பீச்சிவிட்டு பாடல் முடிந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும் ரதியை “ஹே சப்புனா! இதர் ஆவோ!” என்று கூப்பிட்டு வாயைக் கடித்ததில் ரதி தொப்புளைச் சுற்றி ஊசியைப் போட்டதாகப் பேசிக் கொண்டதாகவும் வதந்தி பரவியது. பேசாமல் அந்தப் படத்துக்கு ‘ஏக் மார் தோ துக்கடா’ என்று பெயர் வைத்திருக்கலாம்.

காந்திஜியைப் பின்புலமாகக் கொண்டு படமெடுக்கப் போகிறேன் பேர்வழி என்று ராணி முகர்ஜியைப் பிடித்துப் பிருஷ்டத்தில் கடித்து வைத்ததைக் கோட்சேவின் ஆவிகூட மன்னிக்காது. வசுந்தரா தாசையும் வளைத்து வளைத்துக் கடித்து வைத்த காரியங்களும் படத்தில் நடந்தது.  போதாக்குறைக்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நெஞ்சில் தோட்டாவை ஏந்திய காந்திஜி ரஜினியிடம் அடிவாங்கிய பொன்னம்பலம் ரேஞ்சுக்குப் பறந்து போய் விழுந்து பின்புறத்தைப் புண்ணாக்கிக் கொள்வார். அப்படியிருக்கும் அந்த ரோப் ஒர்க். இதற்கு ராணி முகர்ஜி பரவாயில்லை போலும்! அந்தப் படத்தின் பெயர் ‘ஹே ராணி’ என்றுதான் இன்னமும் நினைவிலிருக்கிறது.

குருதிப்புனலில் கமல் ஹீரோயினைக் கடித்துக் குதறிப் படுத்தியதைக் கண்ட நாசர் கேரக்டர், ‘நடிக்கச் சொன்னா கடிக்கவா செய்வ? வாய் இருந்தாத்தானே கடிப்ப? இந்தா வாங்கிக்கோ!’ என்றவாறே கமலின் பல்லு பகடையெல்லாம் உடைத்து வைத்திருப்பார். கவுதமிக்கு ஒரு அண்ணன் இருந்திருந்தால் அப்படித்தானேயிருக்கும்? ஒரு கட்டத்தில் கமலிடம் கடி வாங்காத நடிகைகளே இல்லை என்றாகிப் போனபோது கமல் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி உலகத்தை நோக்கிப் போனார். அப்போது இந்தியாவில் பிறந்த சில குழந்தைகள் கமல் திரும்ப வந்ததும் அவரோடு ஜோடி போட்டார்கள். ரேபிசுக்கு ஊசிமருந்து தயாரித்த நிறுவனங்களும் இரவும் பகலும் விழித்திருந்து போட்டி போட்டுக் கொண்டு மருந்து தயாரித்தார்கள்.

தான் அத்தனைக் கதாநாயகிகளுக்கும் முத்தம் கொடுத்ததாகக் கமல் வேண்டுமானால் பீற்றிக் கொண்டு திரிந்திருக்கலாம்! ஆனால் கதாநாயகிகள் அவர்களது வீடுகளில் போய் தங்களை ஒரு ஆடு கடித்ததாகத்தான் சொல்லிக்கொண்டார்கள். அதற்குப் பின்பான காட்சிகளில் எல்லாம் லாங் ஷாட்டுகளில் வெரி லாங்கிலேயே நின்று நாயகனின் வெறியை அடக்கினார்கள் என்றும் சொல்லிக் கொண்டார்கள். முன்னர் முத்தத்தின் அச்சனாக இருந்தவர் தற்போது முத்தச்சனாகி இருக்கிறார். 

படங்களில் கதாநாயகிகளுக்கு முத்தம் கொடுத்தார்! பின்பு அரசியலில் புகுந்து யுத்தம் செய்தார்! தற்சமயம் பிக்பாசில் சத்தம் கொடுக்கிறார்! கமலின் முத்தப் பட்டியலை ஒருபோதும் வரையறைக்குக் கொண்டுவர முடியாது என்ற நிலையில் தலைப்புக்கு வருவோம். கமலிடம் முத்தம் வாங்காத மூன்று பேர் இருக்கிறார்கள். 1. ஜனகராஜ், 2.ஒய்.ஜி.மகேந்திரன், 3.பூர்ணம் விஸ்வநாதன். அவ்ளோதான்!

அனைத்து கமல் அபிமானிகளுக்கும் சமர்ப்பணம்.

பிரபுதர்மராஜ் முகநூல் பதிவிலிருந்து

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...