எதிர்பார்ப்பில்லாமல் உழைத்த சிறந்த படைப்பாளி ராண்டர் கை
திரைப்பட வரலாற்றாசிரியரும், கட்டுரையாளரும், எழுத்தாளருமான 86 வயதான ராண்டர் கை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) இரவு சென்னையில் காலமானார்.
ஆங்கில மொழியில் பல புத்தகங்களை எழுதியுள்ள இவர், சென்னையில் நடந்த முக்கிய சம்பவங்களைப் பதிவு செய்துள்ளார். அவரது காலத்தில், மெட்ராஸ் வரலாற்றை இவ்வளவு ஆழமாகப் பதிவு செய்தவர் இவர்.
மாதபூஷி ரங்கதுரை என்ற இயற்பெயர் கொண்ட ராண்டார் கை, திரைப்படங்கள் குறித்து, 1991-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ‘தமிழ் சினிமா வரலாறு’ உட்பட 50 நூல்களை எழுதியுள்ளார்.
‘டேல்ஸ் ஆஃப் தி காமசூத்ரா: பெர்ஃப்யூம்ட் கார்டன்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தை 1999-ல் தயாரித்துள்ளார். இது ‘பிரம்மச்சாரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
திரைப்படங்கள் மற்றும் எழுத்தின் மீதான ஆர்வம் மிகவும் அதிகமாக இருந்தது ராண்டர் கையிடம். சட்டம் படித்து தொழில் செய்து வந்தார். சிறிதுகாலம் கழித்து பேட்டர்சன் அன்கோ என்ற நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். 1976ஆம் ஆண்டு எழுத்துப்பணியில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதற்காக அந்த வேலையிலிருந்து விலகினார்.
பிறகு தி இந்து நாளிதழில் வாராந்திர தொடரான ‘பிளாஸ்ட் ஃப்ரம் தி பாஸ்ட்’ உட்பட பல தொடர்களை எழுதினார்.
ராண்டர் கையின் நெருங்கிய நண்பர் எஸ்.ஜி.ஸ்ரீதரன், ராண்டர் நெல்லூரில் பிறந்து, வழக்கறிஞராகப் பணிபுரிந்து பின்னர் தமிழ் இதழ்களில் எழுதத் தொடங்கியதை நினைவுகூர்ந்தார்.
அவரது ராண்டர் கை என்கிற புனைபெயரால் மக்கள் ஆரம்பத்தில் அவர் ஒரு அமெரிக்கர் என்று நினைத்தார்கள். அவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 50 புத்தகங்கள் மற்றும் பல ஆவணப் படங்களுக்கும் எழுதியுள்ளார். ‘மெமரிஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்பது அவருடைய கடைசிப் புத்தகம்.
மற்றொரு நெருங்கிய நண்பர் ஆர்.டி. ‘ராண்டர் எழுதிய தொடர்கள் மற்றும் புத்தகங்களை வெளிக்கொண்டு வருவதற்கு சாரியும் உதவினார்’ என்றார் ஸ்ரீதர். அவரது பல நாடகங்கள் தொலைக்காட்சி நாடகங்களாகத் தயாரிக்கப்பட்டன. ராண்டர் பாடலாசிரியராக இருந்ததோடு, ‘தவப்புதல்வன்’ படத்திற்குப் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
ஆளவந்தார் மற்றும் லக்ஷ்மி காந்தன் கொலை வழக்குகள் குறித்தும் ராண்டர் பரபரப்பாக எழுதினார். ‘குற்ற எழுத்தாளரின் வழக்குப் புத்தகத்தையும்’ எழுதியுள்ளார்.
ராண்டர் கை sangeetham.com என்ற இணையதளத்தில் கர்நாடக இசைக்கலைஞர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் சினிமாவிலும் அவர் ஒரு சிறந்த என்சைக்ளோமீடியாவாக இருந்தார்.
ராண்டர் கையின் நண்பர்கள் மற்றும் சகாக்கள் அவரது அற்புதமான நினைவாற்றலை மெச்சிப் பாராட்டுகிறார்கள்.
2007ஆம் ஆண்டு சமுத்ரா பத்திரிகையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் அவரது கலைப்பணியைப் பாராட்டி ராண்டர் கைக்கு ‘ஞானசமுத்ரா’ என்கிற விருது வழங்கப்பட்டது.
என்ன இருந்தாலும் ராண்டர் கையின் எழுத்துப் பணியைப் பாராட்டி அரசும் இந்தச் சமூகமும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்கிற கருத்து பரவலாக உள்ளது.