புத்தொளியுடன் பிறந்தது 2023
2022ஆம் ஆண்டு கடந்துவிட்டது. 2023 ஆம் வந்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளைவிட 2022ஆம் ஆண்டு மேலானதாகவே இருந்தது. கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று நினைத்த நேரத்தில் கொரேனா தலைகாட்டியிருக்கிறது. அதையும் கடந்து செல்லவேண்டிய கட்டாயத்தில் 2023ஆம் ஆண்டு நமக்கு நம்பிக்கை தரும் ஆண்டாக அமையும் என்று நம்பலாம்.
கடந்த 2022ஆம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
ஜனவரி மாதம்
10ஆம் தேதி தமிழக உளவுத் துறையின் முதல் பெண் ஐஜியாக ஆசியம்மாள் நியமனம்
10 – கிராமங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
12 – திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளில் கணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
22 – சென்னை மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலைக்கு செம்மொழி சாலை எனப் பெயர் மாற்றம்.
23 – சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு நடந்தது.
26 – இந்தியாவில் முதன்முறையாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னரான தமிழிசை சௌந்தரராஜன் ஒரே நாளில் இரு இடத்திலும் தேசிக்கொடியை ஏற்றினார்.
26 – குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி இடம் பெறவில்லை.
ஏப்ரல் மாதம்
6ஆம் தேதி உலகின் உயரமான முருன் சிலையான சேலம் புத்திர கவுண்டன்பாளையத்தில் 146 அடி முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
8 – அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்பு.
8 – மக்கள் நலப் பணியாளர்கள் 12 ஆயிரம் பேருக்கு மீண்டும் வேலை வழங்க அரசு முடிவு.
14 – அம்பேத்கர் பிறந்த நாளை ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என அரசு அறிவிப்பு.
25 – பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்.
மே மாதம்
5ஆம் தேதி அரசு பஸ்களில் குழந்தைகள் 5 வயது வரை இலவசமாகச் பயணம் செல்ல அனுமதி.
28 – பா.ம.க. தலைவராக அன்புமணி பதவியேற்பு.
ஜூன் மாதம்
9ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாகப் பெண் டவாலி தியானா நியமனம்.
16 – முதன்முறையாக நீலகிரி மலை ரயிலில் முக்கிய பிரேக்ஸ்மேன் பணிக்கு சிவஜோதி என்கிற பெண் நியமனம்.
ஜூலை மாதம்
7ஆம் தேதி புதிதாக 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
11 – அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வு.
25 – தமிழகத்தில் யுகலிப்டஸ் மரம் நடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை வித்ததது.
25 – பா.ஜ. கூட்டணி சார்பில் 64 வயதான இந்தியாவின் இளம் முதல் பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்மு 15வது இந்திய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
25 – ராஜ்யசபா நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜா பதவியேற்றார்.
31 – தமிழக போலீசுக்கு ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம்
2ஆம் தேதி கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இந்தியாவின் நீண்டகால எம்.எல்.ஏ.வாக 18,728 நாட்கள் இருந்து சாதனை படைத்தார்.
6 – பிங்க் நிற அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்தனர்.
7 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் 97 வயதான நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிக் கௌரவித்தது.
7 – காமன்வெல்த் விளையாட்டில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
10 – சென்னை மாமல்லபுர செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய பெண்கள் அணி வெண்கலம் வென்றது.
11 – இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக பா.ஜ. கூட்டணியின் ஜக்தீப் பதவியேற்றார்.
செப்டம்பர் மாதம்
2ஆம் தேதி உள்நாட்டிலேயே தயாரான 860 அடி நீளம் கொண்ட, மணிக்கு 52 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்த் படையில் சேர்ப்பு.
5 – உயர் கல்வியில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
7 – கன்னியாகுமரி – காஷ்மீர் வரையான 150 நாள் 3570 கி.மீ. தூரம் வரையான பாரத் ஜோடோ இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கினார்.
14 – பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் தொடங்கப்பட்டது.
15 – அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சிப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
16 – மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்யப்பட்டது.
17 – நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எட்டு சிவிங்கிப்புலிகளை மத்தியப்பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் திறந்துவிட்டார் பிரதமர் மோடி.
29 – திருமணமாகாத பெண்களும் சட்டப்பூர்வமாக 24 வார கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
30 – இந்தியாவின் முப்படைத் தலைமை தளபதியாக அனில் சவுகான் பதவியேற்பு.
அக்டோபர் மாதம்
12ஆம் தேதி திண்டுக்கல், கரூரில் 29,160 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் அமைய உள்ளது.
11 – தென்னிந்தியாவில் முதன்முதலாக சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேலை தொடக்கம்.
24 – தமிழகத்தில் முதல் பல்லுயிர் பரம்பரியத் தலமாக 477.24 ஏக்கர் நிலப்பகுதி மதுரையின் அரிட்டாபட்டி கிராமம் அறிவிப்பு.
நவம்பர் மாதம்
30ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் பிரக்ஞானந்தா, லக்சயா சென், ஜெர்லின், இளவேனில் அர்ஜுனா விருது பெற்றனர்.
டிசம்பர் மாதம்
3ஆம் தேதி மாற்றுத்திறனாளி மாத ஓய்வூதியம் ரூ. 1000ல் இருந்து 1500 ஆக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிடப்பட்டது.
5 – உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிக்கு முன்செல்பவரில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமனம்.
14 – இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி பதவியேற்பு.
19 முன்னாள் மாணவர் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல்’ பவுண்டேஷன் திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த ஆண்டில் முதல்வரின் செயல்பாடுகள்
தமிழக அரசை எடுத்துக்கொண்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ‘எங்களில் ஒருவன்’ என்று மக்கள் போற்றி புகழும் வகையில் மக்களோடு இணைந்து பல சாதனைகளைப் படைத்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்டை சென்னையில் நடத்தி, அதில் கலந்துகொண்ட 187 நாடுகளின் நன்மதிப்பையும் பெற்றார்.
எல்லோரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும் என்கிற நோக்கில், ‘திராவிட மாடல் ஆட்சி’ நடத்தி வரும் அவர் தமிழ்வழியில் கல்வி பயின்று கல்லூரிகளில் உயர் கல்விக்காக சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிலே சேர்க்கும் ‘புதுமைப் பெண் திட்டம்’, ஒருலட்சத்து 16 ஆயிரம் பள்ளிக்கூட மாணவர்களுக்கு ‘இலவச காலை உணவு திட்டம்’ என்று பல திட்டங்கள் மாணவ சமுதாயம் பயன்பெற இந்த ஆண்டில் நிறைவேற்றினார்.
விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. தொழில்துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு திருச்சி மாவட்டத்தில் மருந்து பெட்டகம் என்பது உள்பட அனைத்து துறைகளிலும் எண்ணற்ற சாதனைகள் அரங்கேறின.
எல்லாவற்றிலும் உச்ச சாதனை என்னவென்றால் இந்த ஒரு ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 647 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 8 ஆயிரத்து 549 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 355 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார்.