100 இசைக் கலைஞர்கள் பங்கேற்றுப் பாடிய ‘வதந்தி’ வெப் தொடர்

 100 இசைக் கலைஞர்கள் பங்கேற்றுப் பாடிய ‘வதந்தி’ வெப் தொடர்

‘வதந்தி’ வெப் தொடருக்காக 100 இசைக் கலைஞர்களுடன் பாடகர்களும் இணைந்து பாடிய பிரம்மாண்ட பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்கிற வலைத்தொடர் ஓ.டி.டி. தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. புஷ்கர் & காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘வதந்தி’ க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

இந்த வலைத்தொடரின் புரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குமரன் தங்கராஜனும் நடித்துள்ளார். இசை சைமன் K கிங்.

இந்த இணையத் தொடருக்காக உலகமெங்குமுள்ள 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து பிரம்மாண்டமாக இசையமைத்தார் சைமன் K கிங்.

‘கொலைகாரன்’ மற்றும் ‘கபடதாரி’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் சைமன் K கிங்,  அமேசான் பிரைம் த்ரில்லர் தொடரான ​​‘வதந்தி’க்காக மீண்டும் ‘கொலைகாரன்’ திரைப்பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸுடன் இணைந்துள்ளார்.

சைமன் K கிங் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் ‘வதந்தி’ வலைத்தொடரின் பின்னணி இசை மற்றும் டைட்டில் ட்ராக்கை  பதிவு செய்தார். இதற்காக, 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களுடன் இணைந்து வதந்தியின் முழு ஒலிப்பதிவுக்கும் இசையமைத்துள்ளார்.

வதந்தி, வலைத் தொடருக்காக பிரத்தியேகமாக ஒரு வகையான டைட்டில் ட்ராக் இயற்றியுள்ளார்.  இந்தப் பாடலின் வரிகளை எழுதிய பாடலாசிரியர்
கு.கார்த்திக், பண்டைய தமிழ் இலக்கிய உரையைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த பாடகர் குழு டைட்டில் ட்ராக்கை வழங்கியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப வல்லுநர்களும் இதற்குப் பங்களித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘பேப்பர் ராக்கெட்’ என்ற படத்தின் வெற்றிகரமான பணிக்குப் பிறகு, சைமன் K கிங் ‘வதந்தி’யில் தனது அற்புதமான இசையைப் பகிர்ந்து கொள்வதை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் கருதுகிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *