வீடு முழுக்க பதக்கங்கள்… 2 வயது குழந்தை உலக சாதனை

 வீடு முழுக்க பதக்கங்கள்… 2 வயது குழந்தை உலக சாதனை

ரெண்டே வயசுதான் ஆகுது. (22-6-2020) அதற்குள் பல சாதனைகளைக் குளித்து வருகிறது இந்தக் குழந்தை. சுட்டித்தனத்துடன் கூடிய மழலைக் குரலில் தமிழில் தேசிய கீதத்தை அழகாகப் பாடி அசத்தியது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த குட்டிப் பாப்பா எம்.ஜி.சுஷ்மிதா கொஞ்சும் மழலையில் தேசிய கீதம் பாடிய பாட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்களும் குவிகிறது. 

2 வயது குழந்தை சுஷ்மிதா, மழலை மொழியில் துருதுருவென பேசுவதில் ஆர்வம் காட்டியபோதே, சுஷ்மிதாவின் தாய் சக்தி, ஞாபக சக்தியை அதிகரிக்கப் பல்வேறு முயற்சிகளைச் செய்து, குழந்தைக்கு தேசிய கீதத்தையும், ஆங்கில எழுத்துக்களையும், சிறு சிறு வார்த்தைகளையும் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். 

இவர் தமிழில் பாடிய தேசிய கீதம் வீடியோ யூடியூப் சேனலில் வைரலாகிவருகிறது.

குழந்தையின் தேசிய கீதம் ஞாபகமாகப் பாடியதைப் பாராட்டி, தேசிய புக் ஆஃப் ரெக்கார்ட், கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட், இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்துள்ளன.

இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் தந்தை கோவிந்தன்  தாய் சக்தி. இருவரும் குழந்தையிடம் பேசும்போது திருப்பிச் சொல்வதில் சுட்டியாக இருந்திருக்கிறது குழந்தை. எந்தப் பாட்டையும் பாடியவுடனே வரிகளை ஞாபகம் வைத்துக்கொண்டு குழந்தை சுஷ்மிதா அதேபோல் பாடியதைக் கேட்டு இந்த முயற்சியைச் செய்தததாகச் சொல்கிறார் குழந்தையின் தந்தை கோவிந்தன்.

நாமும் வியப்பில் ஆழ்ந்தோம் அதே கையோடு குழந்தைக்குப் பாராட்டையும் வாழ்த்தையும் கூறி விடைபெற்றோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...