யோகாவில் மாணவர்கள் புதிய உலக சாதனை

 யோகாவில் மாணவர்கள் புதிய உலக சாதனை

புவி வெப்பமயமாதல் விழிப்புணர்வு குறித்து தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் சந்திர நமஸ்காரம் செய்து சகானா யோகா மைய மாணவர்கள் உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

GWR Global World Record அமைப்பு இந்தச் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ்களை மாணவர்களுக்கு அளித்தது.

இந்த நிகழ்ச்சி 20ஆம் தேதி சென்னை பார்த்தசாரதி கோயில் மார்க்கெட் அருகே உள்ள ஸ்ரீ ஜெயின் ஸ்வேதாம்பர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் நோக்கம் உலகளாவிய அளவில் வெப்பமயமாதல் மற்றும் மாசைக் குறைக்க வேண்டிய நடத்தப்பட்டது.

இந்த உலக சாதனைக்காக சகானா யோகா மையத்தின் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக சந்திரநமஸ்காரம் செய்து புவி வெப்பமயமாதல்  குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை விளக்கினார்கள்.

மேலும்  பல்வேறு வகையான ஆசனங்களையும் செய்தனர். சுமார் 45 நிமிடங்கள் மாணவர்கள் மீன் தொட்டிக்குள் அமர்ந்து மகமித்ரம் மற்றும் தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்து  ராஜக புட்சம், செங்கல்களை அடுக்கி அதற்கு மேல் உட்காந்து  நகு ஏக தண்டாசனம்,  பரிகாசனம், முழு அங்க சிரஸ் சாசனம் போன்றவையும் மாணவர்கள் செய்து காட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த சகானா யோகா மையத்தின் நிறுவனர் Dr. மீனா கிருஷ்ணமூர்த்தி பேசும்போது “உலக வெப்பமயமாதலின் அவசியம் குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இப்போது இருக்கிறோம். மேலும் மரம் நடுதல், பூமியைக் குளிர்விக்க நீர் சேகரிப்பு அவசியம் என்பதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் அறியவேண்டி இந்த உலக சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்தோம். மேலும் அரசாங்கமும் மரம் நடுவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற புவி வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடம் வலியுறுத்தவேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. T.K.S.இளங்கோவன், நக்கீரன் கோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இந்த உலக சாதனை நிகழ்த்திய சகானா யோகா மையத்தின்  மாணவர்களுக்கு, குளபல் வேர்ல்ட் ரெக்கர்ட் மூலம்  சான்றிதழ்களும், கேடயமும் வழங்கபட்டது.

GWR வேர்ல்ட் ரெக்கார்டு நிறுவனம் ஒரு உலக சாதனை மற்றும் விருது வழங்கும் அமைப்பு. இது  இந்திய அரசில் பதிவு செய்யப்பட்டு நான்கு சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...