மாற்றுத்திறனாளிப் பெண்களுக்காக மாற்றுத்திறனாளிப் பெண்களே நடத்தும் சேவை அமைப்பு
‘படித்து நல்ல நிலையில் உள்ள பெண்களைப்போல உடலில் ஏதோ ஒரு குறையுடன் உள்ள பெண்கள் இந்தச் சமூகத்தில் வாழ வேண்டும் என்கிற என்கிற எண்ணத்தோடு உடல்ரீதியாக பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிப் பெண்களுக்குத் தியாகம் அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார் அமுதசாந்தி என்பவர்’ என்று கேள்விப்பட்டு மதுரை நகர்ப்புறத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று பார்த்தோம். அங்கு ஏராளமான பெண் கள் அவரவர்களுக்குத் தெரிந்த வேலையில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண் டிருந்தார்கள்.
உடல்ரீதியாகக் குறைபாடுள்ள காது கேட்காத, வாய் பேச முடியாத பெண் களுக்கு உதவுவதற்காக தியாகம் அறக்கட்டளையை உருவாக்கி அதன் மூலம் கணினிப் பயிற்சி, தையல் பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய் யும் சுயஉதவிக் குழு பெண்கள் தங்கிப் பணிபுரியும் வசதி, ஆதரவற்ற மாற்றுத் திறனாளிப் பெண்கள், தங்கும் வசதி மற்றும் இலவச கிராமப்புற நற்பண்பு மையங்கள், மரக்கன்று நடுதல், முதியோர்களுக்கான சேவைகள் உள்பட கடந்த பதினேழு வருடங்களில் 13,790 பேர் வாழ்வாதாரத்தில் உயர வழி வகை செய்து கொடுத்திருக்கிறார் அமுதசாந்தி என்று அறிந்தோம்.
“வாய்ப்புக் கேட்க நேரில் வரமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்குக் கடிதம் வாயிலாகவும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் செய்து கலாசார மையம், அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்தப்படு கிறோம். இருபத் தைந்து கிராமங்களில் 720 ஏழைக் குழந்தைகளுக்கான இலவச மாலைநேரக்கல்வி மையங்கள் மூலமாக இதுவரை 9,236 குழந்தை கள் பயன் பெற்றுள்ளனர்” என்றார் அமுதசாந்தி.
இந்திய அரசின் உயரிய விருதான ‘ஹெலன் கெல்லர்’ விருது உள்பட பல்வேறு பொது அமைப்புகளின் சார்பாக 150க்கும் மேலான விருதுகள் அமுதசாந்தியின் சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டிருக்கிறது. 2009ஆம் ஆண்டு ஏ.பி.ஜே. அப்துல்காலமின் ‘சிறகுகள்’ அமைப்பின் சார்பாக தமிழகத் திலேயே சிறந்த மாற்றுத்திறனாளிப் பெண் சமூக சேவகியாக அமுதசாந்தி தேர்வு செய்யப்பட்டார். 2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுதசாந்திக்கு ‘சிறந்த சமூக சேவகர்’ விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
மாற்றத்திறனாளிப் பெண்ணான சு.அமுதசாந்தியிடம் பேசினோம்.
உங்கள் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
“2005ல் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண்களின் வாழ்வி யல் மேம்பாட்டிற்காக மூன்று தையல் மிஷின்களுடன் இந்தத் தியாகம் அறக்கட் டளையைத் தொடங்கினேன். இதன் மூலம் சுயதொழில் பயிற்சி, சுயவேலை வாய்ப்பு, ஆலோசனை வழங்குதல், அனுபவப் பகிர்வுகள், வீடுகளுக்கே சென்று உதவி செய்வது, மாற்றுத்திறனாளி சகோதரிகளுக் குத் தேவையைப் பொறுத்து உதவுவது, நலத் திட்டங்கள் பற்றி வழிகாட் டுதல், தங்கும் இல்லம், நட்பு வட்டம், சுயதிறன்களை ஆய்வு செய்தல், தன்னம்பிக்கை அளவினை உணரச் செய்தல், கடந்த காலப் போராட்ட வாழ்வினைப் புரிந்துகொள்ளல், அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கனவு களையும் கேட்பது போன்ற கனிவான அணுகுமுறையோடு தன்னம்பிக்கை யூட்டுகிறோம். மாற்றுத்திறன் மகளிருக் காக மாற்றுத்திறன் மகளிரால் இந்தச் சேவை அமைப்பு நடந்து கொண்டிருக் கிறது. இதன்மூலம் மாற்றுத் திறனாளிப் பெண்களின் மனதில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஏற்படுத்து கிறோம்.
பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியோடும் உயிர்த்துடிப்புடன் இந்த அறக் கட்டளையை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுசெல்கிறோம். இது அவர்களிடையே சமவாய்ப்புகள், சமத்துவம், சமஉரிமை, சகோதரத்துவம், சமாளிக்கும் திறன்களுடைய மாற்றுத்திறனாளிகளாக உருமாற உதவும். எங்களது அடுத்த திட்டம் மாற்றுத்திறன் பெண்களுக்காகச் சொந்த வாழ் விடம் அமைப்பதற்கான பணிகளில் இறங்கியிருக்கிறோம்” என்றார் சு.அமுதசாந்தி.