2022 உலக அமைதி நாள் || செப் 21 ||சிறப்புச் செய்தி
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ஆம் தேதி அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக அமைதி தினத்திற்கான 2022ஆம் ஆண்டு கருப்பொருள் : “இன வெறியை முடிவுக்குக் கொண்டுவாருங்கள். அமைதியைக் கட்டியெழுப் புங்கள்.”
ஐ.நா.வின் பொதுச்செயலாளராகப் பணியாற்றி வந்த ஹாமர்சீல்ட் என்பவர் உலக சமாதான முயற்சியின்போது 1961ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தது வரலாற்றில் சோகச் சுவடாகப் பதிவாகியுள்ளது. இவர் உயிர் துறந்த நாளையே உலக அமைதி தினமாக அனுசரிக்கின்றோம். அவரு டைய இறப்பை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் மாதத்தின் மூன்றா வது செவ்வாய்க்கிழமை சர்வதேச அமைதி நாள் என்று கடைப்பிடித்து வரப்பட்டது. பிறகு 2002ஆம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 21ஆம் தேதியை உலக அமைதி தினம் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்தது.
உலகில் அமைதியை நிலைநாட்ட பாடுபடுபவர்களைப் பாராட்டும் விதமாக அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் ஐ.நா அமைதிப் பரிசு போன்ற விருது கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
உலகெங்கும் போர், இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட நெருக்கடிகள் மக்களின் நிம்மதியைக் குலைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் உலக அமைதி என்பதுதான் ஒவ்வொரு மனிதருக்குமான உன்னதத் தேவையாகும்.
உலகளவில் பல போர் சண்டைகள், பதற்ற நிலைமை, தொற்றுநோய் பிரச் சினைகள், பொருளாதார நெருக்கடி காலநிலை மாற்றம் அடைதல் போன்ற பல இன்னல்களில் மக்கள் அமைதியில்லாத சூழலில் வாழும் நிலையில் உலக அமைதி என்ற நாள் முக்கியமாகக் கருதப்படுகிறது.
2005 செப்டம்பர் 21 அன்று சர்வதேச அமைதி தினத்தைக் குறிக்கும் வகை யில் 24 மணி நேர போர் நிறுத்தம் மற்றும் அகிம்சை தினத்தை உலகம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அன்றைய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் அழைப்பு விடுத்தார்.
செப்டம்பர் 14-16 தேதிகளில் ஐ.நா. தலைமையகத்தில் உலகத் தலைவர் களின் சிறப்பு உச்சி மாநாட்டைத் தொடர்ந்து சர்வதேச அமைதி தினம் கொண்டாடப்படும். இந்த உயர்மட்ட சந்திப்பின் போது, வளர்ச்சி, பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் அமைதியை ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப் பிற்குள் இணைக்கும் உத்திகள் குறித்து அரசு மற்றும் அரசுத் தலைவர்கள் விவாதித்தனர். வரலாற்றில் உலகத் தலைவர்களின் மிகப்பெரிய கூட்டம் இதுவாகும்.
சர்வதேச அமைதி தினம் முதன்முதலில் 1981ஆம் ஆண்டு ஐக்கிய நாடு களின் பொதுச் சபையின் 36/67 தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு செப்டம் பரில் அதன் தொடக்க அமர்வுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டில், 55/282 தீர்மானம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று அகிம்சை மற்றும் போர் நிறுத்த நாளாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பலப்படுத் தப்பட்டது. பொதுச் சபையின் உறுப்பு நாடுகளால் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பொதுச் செயலாளர் அமைதி மணியை அடிக்கும் பாரம்பரிய விழாவுடன் தினம் அனுசரிக்கப்படும். கடந்த கால பாரம்பரியத்தை வைத்து, ஐக்கிய நாடுகளின் அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் மற்றும் மதக் குழுக்களால் உலகம் முழுவதும் பல நிகழ்வுகள் மற்றும் அனுசரிப்புகள் திட்டமிடப்பட்டு அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகளை ஊக்குவிக்கின்றன.
உலக அமைதி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம்
உலகெங்கிலுமுள்ள அமைதியின் லட்சியங்களை வலுப்படுத்துவதே இந்த நாளின் பிரதான நோக்கம் ஆகும். மேலும் இந்த நாள் தற்போது போர் நடந்து கொண்டிருக்கும் அனைத்து நாடுகளிலும் அகிம்சை மற்றும் போர் நிறுத்தத் தினைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் உலகில் வன்முறையைத் தவிர்த்து அமைதி நிலவ ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.
உலக அமைதி தினத்தின் முக்கியத்துவம்
உலகளாவிய ரீதியில் அனைத்து மக்களிடையேயும் அமைதியை எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் பேணுவது என்பதை நினைவுபடுத்தும் நாளாக உள்ளது. உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவதில் இந்த நாள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நாள் நிலையான உலகப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கிறது. இது ஒரு அமைதியான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்குவதற்கான உலகளாவிய ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக முழுமையாக அர்ப்பணிக் கப்பட்ட ஒரு நாள்.
நல்லிணக்கத்துடன் வாழ உலகளாவிய அமைதியின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திக்க மக்களுக்கும் நாடுகளுக்கும் நினைவூட்டும் நாள் உலக அமைதிக்கான நாளாகும்.