ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டுப்பாடு தேவையா?

 ஆசிரியர்களுக்கும் சீருடை கட்டுப்பாடு  தேவையா?

மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது என்பதால்தான் பள்ளியில் சீருடை முறை கொண்டுவரப்பட்டது. இதே முறைதான் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இது மாணவர்கள் மத்தியில் உள்ள (பணவசதி) ஏற்றத்தாழ்வை அகற்று கிறது. அதுவும் பள்ளிச் சீருடையை இலவசமாக பள்ளிகளில் தமிழக அரசே வழங்குகிறது.

இந்த நேரத்தில் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரன் மாணவர்கள் அணியும் பள்ளிச்சீருடையிலேயே பள்ளிக்கு வந்து மாணவர் களுடன் மாணவராக இருந்து ஏற்றத்தாழ்வு இன்றி பழகி மாணவர்கள் நன்கு படிக்கத் தூண்டுகோலாய் இருந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்க விஷயம்.

ஆனால் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் குறிப்பாகப் பெண் ஆசிரியர்கள் கழுத்து நிறைய நகைகளையும் கல் வைத்த வளையல்களையும் லிப்ஸ்டிக், மற்றும் கண்ணாடி வைத்த ஜாக்கெட், பளபளக்கும் சேலையில் வடிவமான தலையலங்காரத்துடன் வருவதைப் பார்க்கமுடிகிறது. இது மாணவர்களின் கல்வியின் கவனத்தைத் திசைதிருப்பும் நிலையை ஏற்படுத் தலாம்.

ஆசிரியர்கள் பாடம் நடத்த வருபவர்கள் எதற்கு முழு அலங்காரத்துடன் பள்ளிக்கு வரவேண்டும்? வசதி வாய்ப்பு இருந்தால் பள்ளி நேரம் முடிந்த வுடன் பயன்படுத்தலாம். அரசுப் பணியில் உடைக் கட்டுப்பாடு உண்டு. தனியார் நிறுவனங்களில் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் உடைக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. உடைக் கட்டுப்பாடு சிறந்த பணிக்கு ஒரு தகுதியாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் அந்தக் கட்டுப்பாடு உள்ளது. அதனால் பள்ளி மாணவர்களைப்போலவே சீருடை வரவேண்டும் என்பதில்லை. ஆடை அலங்காரத்தில் ஒரு கட்டுப் பாடு கொண்டுவரலாம்.

அதற்காக  இந்தாண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனைப்போல மாணவர்கள் அணியும் ஆடைகளையே அணியத் தேவையில்லை. அவர வர் தேர்ந்தெடுக்கும் உடைகளைக் கட்டுப்பாட்டுடன் அணியலாம். அல்லது ஆசிரியர்களுக்குச் சீருடைய ஒழுங்குமுறையை அரசு கொண்டுவருவது நல்லது.

தற்போது தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனைப் பற்றிப் பார்ப்போம்.

கற்பித்தல் முறையில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை கௌர விக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை ஆண்டுதோறும் ‘நல்லாசிரியர்’ விருதை வழங்கி வருகிறது. அதை ஆசிரியர் தினத்தின்று, குடியரசுத் தலைவர் கையால் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்தாண்டு விருதுக்கு, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப் பட்டு கிட்டத்தட்ட மூன்று அடுக்கு ஆய்வுக்குப் பின் இந்தியா முழுவதிலு மிருந்து 46 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

டெல்லி வித்யான் பவனில் நடைபெற்ற விழாவில் இமாச்சலப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, தெலங்கானா, பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து தலா இரண்டு ஆசிரியர்களுக்கும் மற்ற மாநிலங்களில் தலா ஒரு ஆசிரியருக்கும் விருது வழங்கப்பட்டது. அதில் தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு ஆசிரியர் இந்தாண்டு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அவர்தான் இராமநாதபுரம் மாவட்டம், கீழாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன். அவர் அந்த விழாவில், மாணவர் கள் அணியும் அரசுப்பள்ளி சீருடையிலேயே வந்து விருது வாங்கிய சம்பவம் காண்போர் அனைவரையும் கவர்ந்தது.

நல்லாசிரியர் விருது, பள்ளி வருகைப் பதிவேடு, மாணவர்கள் நலனில் அக்கறை, ஆராய்ச்சிக் கட்டுரை, இடைநிற்றல் குறைபாடுகளைக் குறைத் தல் போன்ற புறநிலை வகை மதிப்பீடு மூலமாகவும், படைப்பாக்கம், இணை பாடத் திட்டங்களில் புத்தாக்கம், தேச வளர்ச்சிக்கான பணிகள் போன்ற செயல்திறன் மதிப்பீடு அடிப்படையில்தான் நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை தேர்வுக்குழு சார்பில் ஆறு ஆசிரியர்கள் பரிந்துரை செய் யப்பட்டனர். தேசிய விருதுக்கு, நேர்காணல் நடத்திய டெல்லி அதிகாரி களிடம் ராமச்சந்திரன், ‘நமஸ்தே, வணக்கம்’ என பேசத் தொடங்கினார். பின்னர், அவர்களின் கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரள மாகப் பதில் அளித்தார். ஆசிரியர் ராமச்சந்திரனின் சிறப்பான செயல்பாடு கள் மற்றும் பன்மொழித் திறனுக்காக அவர் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

ராமச்சந்திரன் அப்பள்ளியைத் தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் வகையில் மாற்றிக் காட்டியுள்ளார்.

இணைய வழியில் மாணவர்கள் பாடம் கற்க தனது சொந்த செலவில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஸ்மார்ட் கிளாஸ், இணைய சேவைகளை கையாள்வதற்கான பயிற்சி, சிலம்பம், இசைப் பயிற்சி, ஓவியப் பயிற்சி என மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டுவரும் வகையிலான அனைத்துப் பயற்சிகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

பள்ளிக்கு சி.சி.டி.வி. கேமரா, R.O. வாட்டர், ‘ஹைஸ்பீடு’ பிராட்பேண்ட் இன்டர்நெட், எல்.இ.டி. ப்ரொஜெக்டர், இன்வர்டர், கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் என பள்ளிக்குத் தேவையான எண்ணற்ற பொருட்களைத் தனது சம்பளத்தின் முக்கால் பங்குகளைச் செலவு செய்து தரம் உயர்த்தியுள்ளார்.

இணைய சேவை, இனிய சேவை, இலவச சேவை என்று தொடங்கி பள்ளி வகுப்பு நேரங்கள் போக, மீதி நேரங்களில் அப்பகுதி பொதுமக்களுக்கு மாணவர்கள் மூலம் இணைய சேவை வழியாக ஆதார் கார்டு திருத்தம், மின்சாரக் கட்டணம் மற்றும் இதர அரசு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை இலவசமாகச் செய்து வருகிறார்.

ஆசிரியர் ராமச்சந்திரனின் ஒருங்கிணைந்த கல்வித்திறன் மேம்பாட்டிற் காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி இப்பள்ளிக்கு இங்கிலாந்து நிறுவனம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கொடுத்து கௌரவித்துள்ளது.

ராமச்சந்திரன் பேசும்போது, “அரசுப் பள்ளி மாணவர்களின் முன்னேற்றம் ஒன்றே என்னுடைய வாழ்நாள் இலக்கு. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வருகிறது. அதனை முறை யாகக் கொண்டுசேர்க்கும் பணியைச் சரியாகச் செய்துள்ளதாக நம்பு கிறேன்.  இந்தத் தேசிய விருதை ஒட்டுமொத்த அரசுப் பள்ளி மாணவர் களுக்குச் சமர்ப்பிக்கிறேன். மாணவர்களோடு மாணவர்களாக இருக்கவேண் டும் என நானும் அவர்களைப் போன்று பள்ளிச் சீருடை அணிந்து பணியாற்றி வருகிறேன். இப்போது மட்டுமல்ல, நான் பணி ஓய்வு பெறும் வரை பள்ளிச் சீருடையிலேதான் பணியாற்றுவேன். அதனால்தான் இந்தத் தேசிய விருதையும் பள்ளிச் சீருடையிலேயே சென்று வாங்கினேன்” எனத் தெரிவித்தார் நல்லாசிரியர் ராமச்சந்திரன்.

“அறம் சார்ந்த ஆசிரியர் பணி தொடரட்டும்!” என்று தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நல்லாசிரியர் ராமச்சந்திரனுக்கு விருது அறிவித்ததும் ஊர் மக்கள் கூடி அவருக்குப் பாராட்டு தெரிவித்ததோடு அவர் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்று வந்தபோது கீழாம்பால் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சேர்ந்து பேண்டு வாத்தியம் அடித்து ஆரத்தி எடுத்து மாலை மரியாதையோடு பட்டாசு வெடித்து ஊருக்கு அழைத்துவந்த காட்சி தொலைக்காட்சியின் மூலம் நாடே பார்த்து மகிழ்ந்தது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...