இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளர் அப்பாஸ் அலி தேர்வு

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அப் பாஸ் அலிக்கு இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் பாராட்டுத்  தெரி வித்தார்.

இந்திய நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வர இருக்கும் பங்களாதேஷ் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி யுடன் வருகின்ற 20, 21  மற்றும்  22 ஆகிய தேதிகளில் ஜார்க்கண்ட் மாநிலம்  ராஞ்சியில் மூன்று டி20 கிரிக்கெட் போட்டியிலும், 24ஆம் தேதி வாரணாசியில்  சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றிலும், 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் லக்னோ சஹாரா கிரிக்கெட் மைதானத்தில் மூன்று நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றிலும் விளையாடுகின்றனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும், முதல்முறையாக டெஸ்ட் போட்டியும் நடத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டிகளை இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் அறிமுகப் படுத்துவது இந்தியத் திருநாட்டிற்குப் பெருமை. இந்த இந்தியா- வங்காளதேசம் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடருக்கான  இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராமநாதபுரம் கண்ணாடி வாப்பா சர்வதேச உடற்கல்வி ஆசிரியர் அப்பாஸ்  அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கெனவே பல சிறப்பான வரலாற்றைத் தன் பக்கம் வைத்துள்ளார். அப்பாஸ் அலி, இந்திய அணிக்காகப் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள் ளார். இவர் ஏற்கெனவே ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம், ஐக்கிய அரபு அமீரகத் தின் ஷார்ஜா போன்ற முக்கிய தொடர்களில் பயிற்சியாளராக இருந் துள்ளார். சமீபத்தில் நடந்த வங்கதேச சுற்றுப்பயணத்தின் போதும் பணியாற்றி யுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் பாராட்டு தெரிவித்தார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வானதற்காக கண்ணாடி பாப்பா சர்வதேச பள்ளியின் முதல்வர் ஆதி அருணாச்சலம், பள்ளியின் ஒருங் கிணைப்பாளர் இஸ்ரத் பரிதா, பள்ளியின் நிர்வாக அலுவலர் அன்சர் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் உடற்கல்வி ஆசிரியர் அப்பாஸ் அலி அவர்களைப் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியானது வழக்கமான இந்திய அணி யைப் போல் பயிற்சியாளருக்கும், விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கும் வருமானம் எதுவும் கிடையாது. அவர்கள் தங்களது சொந்த செலவிலேயே சென்று இந்தப் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

மனம் தளராது இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சி அளித்து வரும் இராமநாதபுரம் இளைஞர் அப்பாஸ் அலிக்கு  91-78454 66866 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அவரையும், அவரது குழுவினரையும் உற்சாகப் படுத்துவோம். இதன் மூலம் இந்த கிரிக்கெட் தொடரில் இந்திய அணியைச் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துவோம்.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இராமநாதபுரம் இளைஞர் அப்பாஸ் அலி இன்னும் சில தினங்களில் நேபாளம் செல்ல இருக்கும்  கிரிக்கெட் அணிக்கு  தலைமை பயிற்சியாளராக செல்கிறார். பொருளாதார ரீதியாக கடும் சிரமத்தில் உள்ள அவருக்கு ஆதரவு தர எண்ணம் கொண்ட நல்ல உள்ளங்கள் கீழ்க்கண்ட எண்ணில் அவரை தொடர்பு கொள்ள லாம்.. 9940911332

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!