நரிக்குறவர் வாழ்க்கை முறை எப்படி?
நரிக்குறவர் (Narikuravar) என பொதுவழக்கில் அழைக்கப்படும் அக்கிபிக்கி என்ற மக்கள், தமிழ்நாட்டில் வந்தேரி நாடோடி சமூகத்தினர் ஆவர். இவர்கள் கர்நாடகத் தில் ஹக்கிபிக்கி என்றும் ஆந்திராவில் நக்கவாண்டோ என்றும் அழைக்கப்படு கின்றனர்.
நரிக்குறவர் தமிழர்கள் அல்ல. அவர்கள் வக்ரிபோலி என்ற குஜராத், மராத்தி மாநிலத்தில் உள்ள இந்தோ ஆரியன் இனத்தின் ஒரு மொழி பேசுகிறவர்கள். அவர்கள் மன்னர் சிவாஜி படையில் போர் வீரர்களாக, குதிரைப்படை வீரர்களாக இருந்ததாகவும் அவரது இறப்பிற்குப் பின்னர் முகலாயர்களின் கொடுமைக்குப் பயந்து தமிழ்நாட்டிற்கு 16ஆம் நூறறாண்டுக்குப் பின் தப்பி வந்ததாகவும், அவர்கள் குறி பார்த்து கவண் அடிப்பதில் திறமையானவர்கள் என்பதால் ஆங்கி லேயர்கள் அவர்களை வேட்டைக்குப் பயன்படுத்தியதாகவும் ஒரு செய்தி உண்டு. இவர்கள் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி போன்ற சிறு பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர்.
நரிக்குறவர் சிறுவர்களுக்கு கிராமத்துச் சிறுவர்களைவிட அதிக புத்திசாலித் தனம் (intelligence) இருப்பது ஒரு ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நரிக்குறவர் பெண்கள் எங்கு சென்றாலும் இருட்டுவதற்கு முன்னர் கூடாரத்திற்கு திரும்புவர். அவர்களில் ஒருவர் வெளி ஊர்கள் சென்றபோது பிரசவ வேதனை ஏற்பட்டு தனி இடத்திற்குச் சென்று யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகக் குழந்தை பிரசவித்து தாமே தொப்புள் கொடியை அறுத்துவிட்டு பிள்ளையைத் தோளில் போட்டுச் சென்றதாக ஒரு சம்பவம் உண்டு.
நெல்லை பேட்டையில் நரிக்குறவர் கூட்டுறவு சங்கத்தில் பாசி மணிகள் போன்ற மாலைகளை உறுப்பினர்கள் கடனாக வாங்கி வெளி ஊர்கள், வெளி மாநிலங்கள் விற்பனைக்குச் சென்று பல மாதங்கள் கழித்து திரும்பியதும் கடன் தொகையை ஒழுங்காகத் திரும்பச் செலுத்துவார்கள்.
இவர்களின் அசல் பெயர் வக்ரிவாலா அல்லது குருவிக்கரன் அல்லது நக்கலே அல்லது அக்கிபிக்கி என்பதாகும். ஆனால் தமிழ்நாட்டு முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நரிக்குறவர் என்று தவறாகப் பெயரிடப்பட்டது. குறவர்கள் என்பவர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிஞ்சித் திணை [மலை]யைச் சேர்ந்த தமிழர்கள் ஆனால் இந்த நரிக்குறவர் குசராத்தை பூர்வீக மாகக்கொண்ட நாடோடிகள். இவர்கள் துப்பாக்கியால் வேட்டையாடுகிறார்கள். ஆனால் தமிழ் குறவர்கள் வில் மற்றும் அம்புகளை வைத்து வேட்டையாடுவது, தேன் சேகரிப்பது, மூங்கில் கூடைகளை முடைவது போன்றவையே தமிழ் குறவர்களின் அசல் தொழிலாகும்.
நரிக்குறவரின் முக்கிய கடவுள் தாதாஜி (சூரியன்) மற்றும் குழு சார்ந்த நான்கு பெண் கடவுள்கள். குழுவுக்கு வெளியே மற்றொரு குழுவில் திருமணம் செய் வார்கள். எருமை பலியிடும் குழுவும், ஆடு பலியிடும் குழுவும் முக்கியம்.
அவர்கள் தம்மிடம் ஒரு ‘சாமி மூட்டை’ வைத்து இருப்பார்கள். அதில் ஆடு அல்லது எருமை பலியிட்ட இரத்தம் படிந்த துணி இருக்கும்.
இந்தச் சமூகப் பெண்கள் கழுத்தில் வண்ணமயமான பாவாடை மற்றும் மணி களை அணிந்திருப்பர். ஆண்கள் நீண்ட முடியை வைத்திருப்பார்கள். இவர்கள் விலங்குகளையும் பறவைகளையும் சாப்பிடுவார்கள்.
வழிபாட்டு முறையில் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டாலும் (தாதாஜி) சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுளர் களுக்கே முக்கிய இடமிருக்கிறது. சடங்குகளின் அர்ப்பணிப்பு தேவிய ரையே சேருகிறது. அதேபோல தேவியரே குறிசொல்லும் பூசாரியில் தோன்றி சனங் களுக்குத் தீர்வு வழங்குகிறாள். நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான வழிபாட்டு முறை – எருமைப் பலியிடல்.
திருமணத்தில் ஆண் பெண்ணுக்குத்தான் சீதனம் கொடுக்க வேண்டும்.
கல்வி இன்மை, வேலையின்மை, குடிப்பழக்கம் அவர்களிடம் அதிகம் உள்ளது. தற்போது அரசு அவர்களை அட்டவணை மலைசாதிப் பிரிவில் (ST) சேர்த்துள்ளது. சமீப காலத்தில்தான் ஒரு சில பட்டதாரிகள் நரிக்குறவர் இனத்தில் இருந்து வருகிறார்கள்.