இசையமைப்பாளர்களாக ஜொலிக்கும் பெண்கள்

 இசையமைப்பாளர்களாக ஜொலிக்கும் பெண்கள்

திரை இசையில் பெண்கள் இறங்குவதில்லையே ஏன்? அது பெரும்பாலும் ஆண் தயாரிப்பாளர்கள், ஆண் இயக்குநர்கள் முடிவு செய்கிற விஷயம் இருக் கலாம். அல்லது ஆண் பாடலாசிரியர்கள், பாடகர்கள் சம்பந்தப்பட்ட குழு விவாதமாகவும் இருக்கலாம். அல்லது இசைத்துறையில் ஆண்களே அதிகம் புழங்குவதாலும் இருக்கலாம். அப்படியும் இசையமைப்பாளர்களாக சாதித்த திரைத்துறையில் இசையமைப்பாளர்களாக ஜெலித்த பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த ரத்தினங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

இஷ்ரத் சுல்தானா

பாலிவுட்டின் முதல் இசை இயக்குநராக கருதப்படும் ஜாதன் பாய்க்கு முன்பே, பாலிவுட்டின் முதல் பெண் இசை இயக்குநராக தனது திறமையை நிரூபித்தவர் இஷ்ரத் சுல்தானா. இவர் இசையமைத்த முதல் திரைப்படம் அட்ல்-இ-ஜஹாங் கிர். இது 1934இல் வெளியிடப்பட்டது. இந்தப் படம் தவிர, ‘கசாக் கி லட்கி’க்கும் இசையமைத்தார். இது 1937இல் திரைக்கு வந்தது.

ஜாதன் பாய்

ஜாதன் பாய் பாடகி, நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசை இயக்குநர் எனப் பன்முக ஆளுமை கொண்டவர். அவர் புகழ்பெற்ற நடிகை நர்கிஸின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வாழ்க்கையில் குறிப் பிடத்தக்க படம் 1935ல் வெளியான ‘தலாஷே ஹக்’. இதில்தான் முதலில் இசை இயக்குநராகப் பணியாற் றினார்.

சரஸ்வதி தேவி

சுமார் 34 படங்களுக்கு இசை இயக்குநராகப் பணியாற்றியவர் சரஸ்வதி தேவி. 1936ல் இவர் இசையில் வெளியான அச்சுத் கன்யா மற்றும் ஜீவன் நய்யா திரைப் படங்கள் இந்திய இசை கிரீடத்தில் வைரங்கள். இந்தத் திறமையான பெண் 1961ஆம் ஆண்டு வரை இசை அமைப்பாளராகத் தீவிரமாக செயல்பட்டார்.

பானுமதி ராமகிருஷ்ணா

கோலிவுட்டின் முதல் இசை இயக்குநர். பல மொழிகளில் நடித்த இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத் தாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முக ஆற்றலாளர். திரைப்படத் துறைக்கு இவராற்றிய பங்களிப்பிற்காக 2003ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட் டது. சக்ரபாணி, இப்படியும் ஒரு பெண், வாங்க சமபந்தி வாங்க, பக்த துருவ மார்க்கண்டேயன் ஆகியவை இவர் இசையமைத்த படங்கள்.

உஷா கண்ணா

1941ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தவர். சிறுவய தில் இருந்தே இசையின் மீது பேரார்வம் கொண்டவர். பின்னணிப் பாடகியாக ஆகவேண்டும் என்பதே அவரின் ஆசை. ஆனால் விதிவசத்தால் ஒரு படி மேலே சென்று பாலிவுட்டின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவ ராக பின்னாளில் உயர்ந்து நின்றார். இவருக்கு முன் இருந்த பெண் இசை யமைப்பாளர்கள் ஜாதன் பாய் மற்றும் சரஸ்வதி தேவி.

1959-ல் நசீர் ஹுசைன் இயக்கி வெளிவந்த ‘தில் தேக் தேக்கோ’ (Dil Deke Dekho) இந்திப் படம்தான் உஷா கண்ணா இசையமைத்த முதல் படம். இந்தப் படத்தில் தான் நடிகை ஆஷா பரேக் நாயகியாக அறிமுகமானார். இந்தப் படம் மிக பெரிய ஹிட்டானது. இதன் பின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 1960 முதல் 1980 வரை மூன்று தலைமுறை நடிகர்களுக்கு இசையமைத்த பெருமை உஷா கண்ணாவுக்கு உண்டு.

2003இல் வெளிவந்த ‘தில் பரதேசி ஹோ கயா’ (Dil Pardesi Ho Gaya) திரைப்படம் தான் இவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம். முதுமை காரணமாக பாலி வுட் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் இருந்து ஓய்வு பெற்றுவிட் டாலும்கூட இவரின் பாடல்கள் இன்றும் இசை ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்படு கிறது.

ரூப் குமார் ரத்தோட், முகமது அஜீஸ், பங்கஜ் உதாஸ், ஹேம்லதா போன்ற திறமையான பாடகர்களைத் தன் இசையில் பாட வைத்து திரைத்துறைக்கு உஷா கண்ணா அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தமிழில் வெளிவந்த ‘மதராசபட்டினம்’ படத்தில் ‘பூக்கள் பூக்கும் தருணம்’ பாட லைப் பாடி நம் மனதை கவர்ந்த பாடகர் தான் ரூப் குமார் ரத்தோட்.

பவதாரிணி இளையராஜா

இசைஞானி இளயராஜாவின் மகள் பவதாரிணி. இவர் திறமையான பாடகி என் பதை நாம் அறிவோம். இவர் ஒரு இசை இயக்குநரும்கூட. நடிகை ரேவதி இயக்கிய படம் ‘மித்ர் மை ஃப்ரெண்டி’ற்கு இசையமைத்தார். பின்னர் ‘அவலு’ என்ற தெலுங்குப் படத்திற்கு இசை இயக்குநராகப் பணியாற்றினார். மீண்டும் நடிகை ரேவதியுடன் ‘ஃபிர் மிலெங்கே’, ‘வெல்லாச்சி’ ஆகிய படங்களுக்கு இசை யமைத்துள்ளார்.

ரெய்ஹானா

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த சகோதரி தான் ரெய்ஹானா. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் தாயார் ரெய் ஹானா. தமிழில் சூப்பர் ஹிட் பாடல்களான ‘சாக்லேட்’ படத்தில் ‘மலமல மல்லே மல்லே’, ரஜினியின் ‘சிவாஜி’ படத்தில் ‘பல்லேலக்கா’ பாடல்களைப் பாடியிருக் கிறார். கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் பல்வேறு பாடல் களையும் பாடியுள்ளார். மச்சி (2004) ஆடாத ஆட்டமெல்லாம் (2009) பேசுவது கிளியா (2009) கடலகி (2010) என்னை ஏதோ செய்து விட்டாய் (2011) மஞ்சோட்டிலே வீடு (2012) வசந்தத்தின் கனல் வழிகளில் (2014) புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் (2015) கடைசி பக்கம் (2015) ஏண்டா தலையில எண்ண வெக்கல (2018) ஆகிய இவர் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆனால் அதன் பிறகு, அவர் ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெறவில்லை. இருப் பினும், அவர் பாடுவதில் தனது திறமையை நிரூபித்தார்.

ஷிவி ஆர் காஷ்யப்

ஹிமாச்சல பிரதேசத்தில் பிறந்தவர் ஷிவி ஆர் காஷ்யப். தாயார் ஒரு பாரம்பரிய நடனக் கலைஞர். அவரது தந்தை இசையமைப்பாளர். ஷிவி தனது 13 வயதி லேயே முதல் ஆல்பத்தை வெளியிட்டார். படங்களுக்கு இசை யமைக்கத் தொடங்குவதற்கு முன்பு, நான்கு ஹிமாச்சலி ஆல்பங்களை இயற்றியிருக்கிறார். பஜன்கள் மற்றும் பாடல்களைப் பாடியுள்ளார். பின் ‘தேரே மேரே பெரே’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

எம்.எம். ஸ்ரீகலா

தெலுங்குத் திரையுலகின் ஒரே பெண் இசை அமைப்பாளர் இவர். அவரது தந்தைவழி மாமாவும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையுமான வி.விஜயேந் திர பிரசாத்தின் மூன்றாவது இயக்கமான ‘ஸ்ரீவள்ளி’ அவரது இசையில் 75வது படமாகும்.தெலுங்குப்பட இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் உறவினர்.  12 வயதில் பின்னணிப் பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தனது சகோதரருக்கு இசை இயக்கத்தில் உதவியாக இருந்தார். அவர் தனது முதல் படமான தாஜ்மஹால் மற்றும் தாசரி நாராயண ராவின் ‘நன்னகாரு’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இசையமைத்துள்ளார். தென்னிந்திய திரைப்படங்கள் தவிர, ‘ஹம் ஆப்கே தில் மே ரெஹ்தே ஹைன்’, ‘மேரே சப்னோன் கி ராணி’, ‘ஆகாஸ்’ போன்ற ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஐம்பது திரைப்படங் களுக்கு மேல் இசையமைப்பாளர்.

பல பெண் திறமையாளர்கள் உள்ள இந்திய சினிமாவில் இந்தப் பட்டியல் வருங் காலங்களில் இன்னும் நீளும் என எதிர்பார்க்கலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...