நடிகர் விஜய்யின் 23வது திருமண நாள் கொண்டாட்டம்

 நடிகர் விஜய்யின் 23வது திருமண நாள் கொண்டாட்டம்

விஜய்யின் 23 திருமண நாளை முன்னிட்டு அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அறிவறுத்தலின்படி இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜையும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு காலை உணவும் அம்பத் தூரில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர்  G. பாலமுருகன் ஏற்பாட்டில் பொது மக்கள் சுமார் 500 பேருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது.

சென்னை புறநகர் மாவட்ட இளைஞரணி தலைமை மற்றும் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக மாங்காடு அருள்மிகு ஶ்ரீ  காமாக்ஷி அம்மன் ஆலயத்தில் தங்கத்தேர் பவனி வந்து மேலும் பக்தர்களுக்கு உணவு வழங் கப்பட்டது.
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவரணி தலைமை சார்பாக ஏழ்மையில் இருக்கும் இரட்டை மாணவச் சகோதரிகளுக்கு ரூபாய் 20,000த்தை கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.

கடலூர் மேற்கு மாவட்ட தலைமை சார்பாக, விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் இரத்ததானம் முகாம்  நடத்தப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சனை செய்யப்பட்டு சர்க்கரைப்  பொங்கல்  வழங்கப்பட்டது.
வேலூர் நகர மகளிரணி சார்பில் வேலூர் மகாமாரியம்மன் கோவில் அர்ச்சனை செய்யப்பட்டு மகளிர்க்கு புடவை  வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு [மேற்கு] மாவட்ட சிட்லபாக்கம்  பகுதி தொண்டரணி, செம்பாக்கம் நகரம், பம்மல் மற்றும் அனகாபுத்தூர்  பல்லாவரம் நகரம் தொண்டரணி சார்பில்  தர்கா பள்ளிவாசல், கங்கை அம்மன், சாய் பாபா, ஸ்ரீ கன்னியம்மன்  ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் தலைமை சார்பாக  புதுக்கோட்டை நகர பகுதியில் அமைந்துள்ள பார்வையற்றோர் பள்ளியில்  உள்ள மாணவர்களுடன்  விஜய்யின் திருமண நாள் கேக் வேட்டி கொண்டாடப்பட்டு அவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கிப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கிழக்கு ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாத்தூரில் உள்ள கருணைக் கண்கள் முதியோர் இல்லத்தில் உள்ள அனைத்து முதியோர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...