சுங்கச்சாவடி கட்டணம் உயருகிறது? -வேல்முருகன் எச்சரிக்கை
சுங்கச்சாவடி கட்டணம் மூலம் சாமானியர்களைச் சுரண்டுகிறது ஒன்றிய அரசு என்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ. வுமான தி.வேல்முருகன். அவரிடம் பேசினோம்.
எந்த அடிப்படையில் அப்படிச் சொல்கிறீர்கள்?
“தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர வாய்ப்பு இருப்ப தாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 29,666 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள 5,400 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை களில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்தச் சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 என இரண்டு கட்டங்களாகச் சுங்க கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட் டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது சுங்கக் கட்டணம் உயர்த்தப் பட இருப்பது பொதுமக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தி கோடிக்கணக்கில் மக்களின் பணத் தைக் கொள்ளை அடிக்கும் இந்த ஒன்றிய அரசு, தற்போது சுங்கக் கட்டணத்தை மேலும் உயர்த்த இருப்பது கண்டனத்துக்குரியது.
தற்போதைய சுங்கக் கட்டண உயர்வால் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் தள் ளாடிக் கொண்டிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும், கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. சுங்கக் கட்டண உயர்வால் மறைமுகமாகச் சரக்கு வாக னங்களின் வாடகைக் கட்டணம் அதிகரித்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்.
இது ஒருபுறமிருக்க, சுங்கச்சாவடி என்பதே பகற்கொள்ளைதான். ஒப்பந்த நிறுவ னங்கள் போட்ட பணத்தை சில ஆண்டுகளிலேயே லாபத்துடன் திரும்ப எடுத்து விட்ட பிறகும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கட்டண வசூலுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.”
மத்திய அரசு என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள்?
“தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தும் முடிவை ஒன்றிய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் திரும்பப் பெறவேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் அன்றாடம் வசூலிக்கப்படும் உபயோகிப்பாளர் வாகனக் கட்டண விவரம், சுங்கச் சாவடிகளில் தினசரி கடந்து செல்லும் மொத்த வாகன விவரங்கள் மற்றும் சாலை மற்றும் சுங்கச் சாவடி களைப் பராமரிப்பு செய்வதற்கான செலவுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படும் லாபங்கள் உள்ளிட்ட விவரங்களை, பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், ஒன்றிய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்றார் வேல்முருகன்.