எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் இவர்களுக்கு கிடைக்காதது கேப்டன் விஜயகாந்த்-க்கு… !
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பலரால் செய்ய முடியாத சாதனையை அசால்டாக விஜய் காந்த் செய்திருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் படுமேகமாக வைரல் ஆகி வருகிறது தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் இவர் தன்னுடைய நடிப்பு திறமை மூலம் உச்ச நடிகர் ஆக விளங்கி வந்தார் அது மட்டும் இல்லாமல் நல்ல உள்ளம் கொண்டவர் சினிமாவில் யாருக்கு ஏதும் கஷ்டம் இருந்தால் ஓடிவந்து உதவக்கூடியவர்.
இவர் நடிக்கும் பொழுது ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என பல நடிகர்கள் டாப்பில் சினிமாவில் புகழ் உயர்ந்து இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக இணைக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் ஆக்சன் திரைப்படங்களில் தான் விஜயகாந்த் அதிகமாக நடித்திருப்பார்.
ஏனென்றால் ஆக்சன் திரைப்படம் விஜயகாந்துக்கு நல்ல கை கொடுத்தது மேலும் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை தாண்டி அரசியலுக்கு விஜயகாந்த் வர ஆரம்பித்தார். இந்த நிலையில் தற்பொழுது விஜயகாந்த் அவர்களுக்கு 70 வயது ஆகிவிட்ட நிலையில் எழுபதாவது பிறந்த நாள் அவர்களின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி விஜயகாந்த் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சம்பவனாக இருந்த எம் ஜி ஆர் சிவாஜி கமலஹாசன் ரஜினி ஆகியோர்கள் நூறாவது படம் பெரிதாக வெற்றி பெறவில்லை ஆனால் கேப்டன் விஜயகாந்த் நடித்த நூறாவது திரைப்படமான பிரபாகரன் மாபெரும் வெற்றி பெற்றது தற்பொழுது இருக்கும் மண்ணின் நடிகர்களின் 100 பட பட்டியலை தான் தற்பொழுது இங்கு பார்க்க இருக்கிறோம்.
எம்ஜிஆர் – தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி முதலமைச்சராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் இவருடைய நூறாவது திரைப்படம் ஒளிவிளக்கு இந்த திரைப்படத்தில் மீனா குமாரி தர்மேந்திரா, சௌகார் ஜானகி ஜெயலலிதா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் எம்ஜிஆர் அவர்களுக்கு நூறாவது திரைப்படமாக வெளியாகியது ஆனால் வணிக ரீதியாக வெற்றி அடையவில்லை.
சிவாஜி கணேசன் – நடிகர் திலகம் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் சிவாஜி கணேசன் இவருடைய நூறாவது திரைப்படம் தான் நவராத்திரி ஒன்பது விதமான கெட்டப் கலையில் சிவாஜி பின்னி பெடல் எடுத்திருப்பார் நடிகை திலகம் சாவித்திரியும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்ப்பை பெற்றது ஆனால் படம் வெளியான பொழுது வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
ரஜினிகாந்த்- அந்த காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நூறாவது திரைப்படமாக ராகவேந்திரா திரைப்படத்தில் நடித்திருந்தார் தன்னுடைய துள்ளாத நடிப்பை விட்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் ஆனால் இவருக்கு இந்த திரைப்படம் பெரியளவு வரவேற்பு பெறவில்லை.
கமலஹாசன் – நடிகர் கமலஹாசன் உலக நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார் இவருடைய நூறாவது திரைப்படம் ராஜபார்வை இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை அதேபோல் நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு நூறாவது திரைப்படம் ஆக வாத்தியார் வீட்டுப்பிள்ளை வெளியானது அதேபோல் நடிகர் பிரபுவிற்கு நூறாவது திரைப்படம் ஆக ராஜ்குமார் வெளியானது ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
விஜயகாந்த் – இதுவரை யாராலும் அசைக்க முடியாத சாதனை படைத்தவராக வலம் வருகிறார் நடிகர் விஜயகாந்த் அவருடைய நூறாவது திரைப்படம் தான் கேப்டன் பிரபாகரன் இந்த திரைப்படம் 1991 வெளியானது இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு பாடலே கிடையாது இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் 275 நாட்களைக் கடந்து இந்த திரைப்படம் சாதனை படைத்தது.