பாக்யராஜ் ஏன் ஓ.பி.எஸ்.சுடன் இணைந்தார்? இதுதான் பின்னணி?

 பாக்யராஜ் ஏன் ஓ.பி.எஸ்.சுடன் இணைந்தார்?  இதுதான் பின்னணி?

அ.தி.மு.க.வில் வலுத்த ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். பிரிந்தனர். அ.தி.மு.க. இரண்டாகப் பிளந்தது. இவர்கள் பொதுக்குழு நடந்தது, நடத்துவது குறித்து கோர்ட்டில் வழக்குத் தொடுக் கப்பட்டு இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற 30ஆம் தேதி அல்லது 1ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. இந்நிலையில் திடீரென ஓ.பி.எஸ்.சை சந்தித்த நடிகர் கே.பாக்யராஜ் அவரது கட்சியில் இணைந்தார். இதன் பின்னணி என்ன?

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை இழுக்க ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். இரு தரப்புத் தலைவர்களும் மாவட்டம் தோறும் போன் போட்டு போட்டிப் போட்டுக்கொண்டு பேசி வருகிறார்கள். ஓ.பி.எஸ். மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் மாவட்டச் செயலாளர் களிடம் ‘அண்ணே, வாங்கண்ணே நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று பேசி வருகிறார். அந்த வகையில் ஒருவர் கே.பாக்யராஜ் வந்து இணைந் திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் கே.பாக்ய ராஜ். பாரதிராஜா வின் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு அவரது படத்திலேயே ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். இவர் இயக்கிய முதல் படம் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’. தனது வித்தியாசமான இயக்கம் மற்றும் நடிப்பில் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள் ளார் பாக்யராஜ். அவர் சினிமாவில் வளர்ந்து வரம்போது அவருக்கு உதவி செய்த பிரவீணா என்கிற நடிகையை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

அதன் பிறகு பாக்யராஜ் வளர்ந்த நடிகராக ஆனார். மிக பிஸியாக இருந்த அவர் அவருடன் நடித்த ஒரு நடிகையுடன் காதல் ஏற்பட்டது பிரவீணா வுக்குத் தெரிந்து குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்பட்டிக்கிறது. திடீரென பிரவீணா விஷமருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு சில ஆண்டுகளில் உடன் நடித்த பூர்ணிமா  என்கிற பிரபல நடிகையை மணந்தார். சொந்தமாகப் படம் எடுத்தார். ‘வேட்டியை மடித்துக்கட்டு’ என்கிற படத்தின் மூலம் பெரிய நஷ்டத்தை சந்தித்து பேங்க் சொத்துக்களை ஜப்தி செய்யுமளவுக்குப் போனது. விரக்தியில் இருந்தவருக்கு அதன் பிறகு படங் களை இயக்கும் வாய்ப்பும் குறைந்தது.

‘பாக்யா’ என்கிற வார இதழை பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்து நடத்தி வருகிறார். ஆனால் அதனால் பெரிய லாபமில்லை. நஷ்டத்தில்தான் நடத்திவருகிறார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் தலைவராக நின்று தோல்வியைச் சந்தித்தார். சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இயக் குநர் கே.பாக்யராஜ் தற்கால சினிமாவில் ஜொலிக்கமுடியாமல் போனது. அதன் காரணமாகத் தற்போது தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார். விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

எம்.ஜி.ஆரால் ‘என் கலையுலக வாரிசு பாக்யராஜ்’ என்று அறிவிக்கப்பட்ட வர் கே.பாக்யராஜ். ஆனாலும் பாக்யராஜ் ‘வாரிசு’ என்ற அளவில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை, அடையாளப்படுத்தவும்இல்லை.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று தனித்தனியாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தது. அப்போது பாக்யராஜ் ஜானகி அணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அதன்பிறகு ஜானகி, அ.தி.மு.க. ஜெயலலிதாவிடம் கட்சியைக் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண் டார். அதன் பிறகு பாக்யராஜ் ‘எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.

இந்தக் கட்சி 1991ல் கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்தக் கட்சி ஆரம்பக் கட்டத்திலேயே படுதோல்வி அடைந்தது. அந்தக் கட்சியைக் கிடப்பில் போட்டுவிட்டு பாக்யராஜ் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அந்தக் கட்சியிலும் போணியாகாததால் 2006ஆம் ஆண்டு கருணாநிதி முன்னிலையில் பாக்ய ராஜ் தி.மு.க.வில் இணைந்து ஜெயலலிதாவை விமர்சித்தார். அதன் பிறகு தி.மு.க.விலிருந்து விலகி சும்மா இருந்தார்.

திரைப்படங்களில் சிற்சில வேடங்களில் நடித்த பாக்யராஜ் கடந்த ஒரு வருடமாக அ.தி.மு.க. குறித்து கருத்துத் தெரிவித்துவந்தார். எதிர்பாராதவித மாக அ.தி.மு.க. (தலைமை) இரண்டாக உடைந்து அடிதடி வழக்காகி நீதி மன்றத்தில் இருக்கும் நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப் பாளர் ஓ.பி.எஸ். முன்னிலை நடந்தது. அப்போது அங்கு வந்த நடிகர் பாக்ய ராஜ், ஓ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். பாக்யராஜை இணைப்பதற்காக அவரிடம் ஒரு மாதமாகப் பலர் பேசியிருக்கிறார்கள்.

பாக்யராஜ் ஓ.பி.எஸ். கட்சியில் இணைவதால் எந்தப் பயனும் இல்லை என் கிறார்கள் கட்சி வட்டாரத்தில். ஒரு பயன் உண்டென்றால் பாக்யராஜ் கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். எடப்பாடி தரப்பில் தலைமை யில் இருப்பவர்கள் பெரும்பாலும் கொங்கு கவுண்டர் சமுதாயத்தினர். நம் பக்கம் அந்தச் சமுதாயத்தில் நாடறிந்த ஒரு பிரபலம் வேண்டும் என்று பேசி பாக்யராஜை அழைத்து வந்திருக்கிறார்கள். கொங்கு பகுதியில் கூட்டம் நடத்தும்போது மக்கள் சேர்வதற்கு வாய்ப்பாகவும் இருக்கும் என்பது திட்டம். மேலும் அடுத்தக்கட்டமாகப் பல அ.தி.மு.க. தலைவர்களையும் எம்.எல்.ஏ.கள் – எம்.பி.களையும் இழுக்க ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இரண்டு பக்கமும் திட்டமிட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் சில கட்சிக்காரர்கள்.

அ.தி.மு.க. தலைமைப் பதவி போட்டா போட்டியில் தி.மு.க. தரப்பும் இறங்கி வேலை செய்தாகத் தெரிகிறது. எடப்பாடி வலிமையான எதிர்க்கட்சியாக வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது தி.மு.க. அதனால் அவர்களின் மறைமுக ஆதரவு ஓ.பி.எஸ். பக்கம்தான். இதையெல்லாம் எட்டி இருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. அ.தி.மு.க. வில் தனக்குச் சாதகமான சூழல் வருகிறபோது தலையிடலாம். அல்லது அப்படியே இருக்கட்டும் என்று கணக்குப் போட்டு வருகிறது பா.ஜ.க.

எப்படியும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அ.தி.மு.க. ஒற்றைத் தலைமை மோதல் ஒரு முடிவுக்கு வந்தாகவேண்டும். இல்லையென்றால் ஒரே இரவில் இரு தரப்பையும் ரசவாத வித்தையும் ஒட்டவைத்து தன் பக்கம் ஆதரவைத் தெரிவித்து அதிக தமிழகத்தில் கணிசமான சீட் பெற லாம் என்பது பா.ஜ.க. திட்டம். 2024 தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. ஒத்து வரவில்லை என்றால் அதைக் கழட்டி விட்டுவிட்டு பிற கட்சிகளை இணைத்து தனியாக கோதாவில் இறங்கலாம் என்று காத்திருக்கிறது பா.ஜ.க.

அ.தி.மு.க.வின் இரு தரப்புக்கும் இந்த இரு ஆளும்கட்சிகளின் தந்திரம் தெரிந்திருந்தாலும் இணைவதற்கு இவர்களின் அதிகார ஈகோ இடம் தர மறுக்கிறது. இந்தப் பிரச்சினை வெட்டவெளிச்சமாக 2024 வரை காத் திருப்போம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...