உள்ளதைச் சொல்லும் நல்ல மனிதர் விஜயகாந்த்

 உள்ளதைச் சொல்லும் நல்ல மனிதர் விஜயகாந்த்

விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம் என்றால் அரசியலிலும் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக இருந்தார்.

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருந்தாலும் ஆக் ஷன் ஹீரோவாக அதிரடி வசனங்கள் பேசி நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. ஆக் ஷன் படமாக இருந்தாலும் தங்கை, மனைவி, தாய் பாசம் கொண்ட குடும்பக் கதையாக வும் இருக்கும் என்பதால் பெண் ரசிகர்களும் அவரது படங்களைப் பார்த் தனர். அதனால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தார்.

இவரது படங்கள் சி மற்றும் பி பிரிவு ரசிகர்களைக் கட்டிப்போட்டது. இவர் கதை கேட்டு ஒப்புக்கொண்டால் நடிப்பைத் தவிர வேறு எந்த விஷயத்தி லும் தலையிட மாட்டார். இவரால் எந்தப் படமும் நின்றது என்ற வரலாறு இல்லை.

இவர் சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் கஷ்டத்தில் உள்ளவர்களுக் காக இரங்குபவர்தான். இதனால் இவர் அரசியலுக்கு வருவதை மக்கள் எதிர் பார்த்தனர். அதன்படியே அரசியலுக்கு வருவேன் எனச் சொன்னதோடு நிற்காமல் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தனது ரசிகர் மன்றக் கொடியையே கட்சிக் கொடியாகவும் அறிவித்தார்.
விஜயகாந்த் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தனையே கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார்.

2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், முதலில் அரசியல் கட்சி தொடங்கி முதன்முதலில் தேர்தலில் நின்ற விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினரானார். பா.ம.க.வின் கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில் விஜயகாந்த்தின் சூறாவளி பிரசாரத்தால் அமோக வெற்றி பெற்றார். ஆனால் இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.வைச் சேர்ந்த மற்ற வேட் பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவ ராகப் பதவியேற்றார். இவர் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது.

மாபெரும் கட்சியான தி.மு.க.வுக்கே அந்த எதிர்க்கட்சித் தகுதி கிடைக் காமல் போனது. அப்போதுதான் விஜயகாந்தின் பவர் என்ன என்பது தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தெரிந்தது. 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலை வராகவும் இருந்தார்.

அ.தி.மு.க.வுக்கு ஆதரவு எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படாமல் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அதிகாரத் துக்கு எதிராகப் பொங்கி எழுந்தார். சட்டப்பேரவையிலேயே அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களின் முன்னால் பாய்ந்து சென்றது சட்டசபை வரலாற் றில் குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கலைஞர் விஜயகாந்தின் கூட்டணிக்காகக் காத்திருந்தார். பழம் நழுவி பாலில் விழும் என்று காத்தி ருப்பதாக அவர் தெரிவித்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

பிறகு சில லாபிகளின் மூலம் விஜயகாந்தை  மக்கள் நலக் கூட்டணியுடன் இணைக்க மிகக் கடுமையான தந்திரம் நடந்தது. தமிழக சட்டசபை வரலாற் றிலேயே நடக்காத ஒரு விஷயம் நடந்தது. மூத்த கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோவின் ம.தி.மு.க., திருமாவளவன் விடுதலை சிறுததைகள் போன்ற சில கட்சிகள் சேர்ந்து விஜயகாந்த்தை ஏற்றுக்கொண்டு முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலைச் சந்தித்தனர்.

அத்தேர்தலில் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட் டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணி கட்சிகள் அனைத்தும் எல்லா தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தனர்.

விஜயகாந்தின் மாறுதலால் தி.மு.க. ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார் என்பது தமிழக வரலாற்றில் மறக்கமுடியாத மாறுதல்.

அதன் பிறகு விஜயகாந்த்தின் உடல்நிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் கொடுப்பதை யாருக்கும் சொல்லிச் செய்யமாட்டார். ஆகாசப் புரட்டு விளம்பரங்களை விரும்பாதவர். பொது இடமாக இருந்தாலும் மனதில் பட் டதைப் பட்டென்று பேசக்கூடியவர். அதனாலேயே மீடியாக்களின் கேள்விக் கணைகள் அவரை மிகவும் காயப்படுத்தியது. மீடியாக்கள் அதைச் சாதக மாகப் பயன்படுத்திக்கொண்டு அவரின் நல்ல இமேஜை கெடுத்து நாசமாக் கியது.

உடல்நலமின்மையால் மீடியாக்களுக்கு அவர் பதில் தரமுடியாத நிலை யில் அதுவே தொடர்கிறது. அவருக்குப் பிறகு அவரது மனைவி பிரேமலதா அந்தக் கட்சிக்குத் தலைமை ஏற்று புயலாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரு கிறார்.

சினிமா வாழ்க்கை
விஜயகாந்த், மதுரையில் தந்தை கே.என் அழகர்சுவாமி, தாய் ஆண்டாள் அழகர்சுவாமிக்கு மகனாக 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறந் தார். நடிப்புக் கலையில் அதிக ஆர்வம் கொண்டு, சினிமாவில் நடிகனாக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல முயற்சிகள் செய்தார்.

விஜயராஜ் என்ற தனது பெயரில் ராஜ் என்னும் வார்த்தையை நீக்கிவிட்டு காந்த் என்னும் வார்த்தையுடன் இணைத்து ‘விஜயகாந்த்’ என தனது பெயரினை மாற்றி அமைக்கொண்டார்.
தொடக்கத்தில் இவர் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், பின்னர் நாயகனாகத் தனது பயணத்தைத் தொடங் கினார். இவர் 1979ல் ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் நடித்துள்ளார், பின்னர் அதே ஆண்டு ‘இனிக்கும் இளமை’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

1980ல் வெளியான ‘தூரத்து இடி முழக்கம்’ என்ற படத்தில் இவர் கதா நாயகனாக நடித்து திரையுலகில் கவனிக்கப்பட்டார்.
இவரது அதிரடி நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட் டறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு அடை யாளத்தைப் பெற்று தந்தது.

1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ல் நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர். இவர் களது இளைய மகன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.
நடக்கத் தொடங்கியதிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பைக் கவர்ந்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு இணையாக இவரது படங்கள் இருந்தன. இதுவரை 156 படங்களில் நடித் திருக்கிறார்.

1991ஆம் ஆண்டில் ஆர்.செல்வமணி இயக்கத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட விஜயகாந்த்தின் நூறாவது படமாக வெளிவந்த ‘கேப்டன் பிரபாகரன்’ மிகப்பெரிய வெற் றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம்தான் இவர் பெயருக்கு முன்னால் ‘கேப்டன்’ என்னும் அடைமொழியைப் பெற்றுத் தந்தது.

விஜயகாந்த் இதுவரை தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் கேப்டன் விஜயகாந்த்  இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி கண்டது.  

தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகமான புதுமுக இயக்குநர்களுக்கு படம் இயக்கும் வாய்ப்பளித்த நடிகர் விஜயகாந்த்தான். புதுமுக இயக்குநர் கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, டெக்னிகலாக தமிழ் சினிமா வளர்வதற்குக் காரணமாக திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும்.
தேசத்தைக் காக்க புரட்சி வசனங்களைப் பேசி நடித்ததால் இவருக்கு தமிழ் சினிமாவில் ‘புரட்சி கலைஞர்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவ ராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி பல கோடி ரூபாய் கடனில் இருந்த தமிழ்த் திரைப்பட சங்கத்தைத் தனது சிறந்த வழிகாட்டு தலில் ஒரு முன்னணி திரைப்பட சங்கமாக உயர்த்தினார்.
தமிழக அரசு விஜயகாந்த்துக்கு கலைமாமணி விருது , எம்.ஜி.ஆர். விருது, சிறந்த பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

பிரதிபலன் பாரா உதவி
கார்கில் நிவாரண நிதிக்கு ரூ. 5,00,000 வழங்கிய விஜயகாந்த், ஒவ்வொரு ஆண்டும் லிட்டில் ப்ளவர் பள்ளிக்கு ரூ25,000 நன்கொடை வழங்குகிறார்.
நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்கள் கல்லூரியில் இணைவதற்கு உதவியாக, எந்தவொரு கட்டணமும் இன்றி தனது கல்லூரியில் சேர்த்துக் கொண்டார்.
ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாள் அன்று ஏழைகளுக்கு தையல் இயந்திரம், மூன்று சக்கர வண்டி, இஸ்திரிப்பெட்டி போன்ற உதவிகளை வழங்கிவருகிறார்.
எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜானகி ராமச்சந்திரன், தேர்தல் பிரச்சாராங்களில் எம்.ஜி.ஆர். பயன்படுத்திவந்த வாகனத்தை விஜயகாந்திற்கு வழங்கியுள்ளார்.

70 வயதாகும் விஜயகாந்த்துக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு மருத் துவமனையிலிருந்து வீடு திரும்பி வாழ்ந்துவருகிறார்.

அரசியலிலும் சினிமாவில் நல்ல பெயர் எடுத்திருக்கும் விஜயகாந்த் நல்ல மனம் படைத்த விஜயகாந்த் உடல்நலமாகி வர இந்தப் பிறந்த நாளில் விரும்பி வாழ்த்துகிறோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...