14 ஆயிரம் வாசக எழுத்தாளர்களை ஒன்றிணைத்த முகநூல் குழு
படைப்பாளர்கள், எழுத்தாளர்களை எழுதவைப்பது காலத்தின் தேவை. அவர் களைத் தொடர்ந்து எழுத ஊக்குவிப்பது அவசியம். ஒரு பத்திரிகை நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் செய்ய வேண்டிய இந்தச் செயலை ஒரு குழுவாக இருந்து செய்து சாதித்திருக்கிறார்கள். அந்தக் குழுதான் ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் குழு. இவர்கள் 14 ஆயிரம் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து எழுத வைத்திருக்கிறார் கள். சமீபத்தில் இந்தக் குழு தொடங்கி 5வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக நடத்தினார்கள்.
எழுத்தாளர், இயக்கியவாதிகள், தன்னுணர்ச்சிப் படைப்பாளர்கள் என்பவர்கள் உருவாக்கப்படுவதில்லை, தானே உருவாக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்கள் தொடர்ந்து தொய்வின்றி எழுத, பயணிக்க தளமும் தூண்டுகோளும் தேவை. அப்படி ஏணியாக இருந்து ஏற்றிவிடுகிறவர்கள்தான் இதழாசிரியர், இலக்கிய அமைப்புகளை நடத்துபவர்கள்.
மறைந்த மூத்த எழுத்தாளர், பத்திரிகையாளர் நாரண.துரைக்கண்ணன் அவர்கள் தாம் பணியாற்றிய பத்திரிகைகளில் மூலம் பல எழுத்தாளர்களை உருவாக்கிய வர், பிரபல எழுத்தாளர்களையும் இணைத்து நிறைய எழுத வைத்தவர். அதே போல் கோமல் சுவாமிநாதன் அவர்களும் தான் ஆசிரியராக இருந்த நடத்திய ‘சுபமங்களா’வில் அரிய படைப்புகளை வெளியிட்டதோடு நிறைய புதிய எழுத் தாளர்களையும் எழுதவைத்து உருவாக்கினார். பத்திரிகையாளர் சாவி நடத்திய பத்திரிகையான ‘சாவி’ இதழில் நிறைய புது எழுத்தாளர்களை எழுத வைத்து உருவாக்கிய எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்தான் தற்போது ஊடகங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கிறவர்கள்.
அதேபோல் தற்காலச் சமூக ஊடகமான முகநூலைப் பயன்படுத்தி ‘வாசிப்போம் தமிழிலக்கியம் வளர்ப்போம்’ என்கிற குழுவின் மூலம் 14 ஆயிரம் வாசகர்களை யும் எழுத்தாளர்களாகவும் படைப்பாளர்களாகவும் விமர்சகர்களாகவும் இருந்த எழுத ஒரு தளமாக அமைத்திருக்கிறார் அதன் முதன்மை அட்மின் மந்திரமூர்த்தி அழகு. இவர் பத்திரிகையாளர் அல்ல, பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆனால் தீவிர வாசிப்பாளர், எழுத்தாளர், விமர்சகர். கொரோனா காலகட்டத்திலும் குழுவை சோர்வடையாமல் இயங்க ஆன்லைன் மூலமாக கூடடங்களை நடத்தியவர். ‘வாசிப்போம் தமிழிலக்கிய வளர்ப்போம்’ குழுவில் நாடெங்குமிருந்து பலர் எழுதுகிறார்கள். குறிப்பாக, அலுவலகம் செல்லும் பெண் கள் மற்றும் இல்லத்தரசிகளும் நிறைய பேர் தங்கள் எழுத்தாற்றலை இங்கே படைக்கிறார்கள்.
இந்த வாசிப்போம் தமிழிலக்கிய வளர்ப்போம் முகநூல் வாசிப்புக் குழுவின் ஐந்தாவது ஆண்டு தொடக்க விழா 20-8-22022 சனிக்கிழமை மாலை சென்னை யில் உள்ள புதிய டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது.
ஆண்டு விழா என்பது எந்த ஓர் அமைப்புக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந் தது. கடந்த ஓராண்டிலே கடந்து வந்த பாதை என்பது முக்கியமானது. அந்த வகையில் எதிலும் பாசிடிவான செய்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு தொடர்ந்து குழுவை நண்பர்கள் அனைவரது ஒத்துழைப்புடன் முன்னெடுத்து முன்னின்று நடத்தினார் மந்திரமூர்த்தி அழகு.
ஆரணி, விழுப்புரம் மாவட்டத்திலிருந்தும் புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் வாசக, எழுத்தாளர்கள் வருகை தந்திருந்து அரங்கை நிறைத்தார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் இரா முருகன், கல்கி பொறுப்பா சிரியர் ரமணன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எழுத்தாளர் அஜயன் பாலா, கவிஞர் பிருந்தா சாரதி, எழுத்தாளர் ஜா.தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையில் பேசிய மந்திரமூர்த்தி இந்தக் குழுவில் சில வரைமுறைகளை வைத்திருக்கிறோம். அதாவது சாதி, மதம், இனம், ஒரு குழு சார்ந்த பதிவுகளைத் தவிர்க்கிறோம். பெயர்களையும் திரும்பத் திரும்ப ஒரே பெயரை வைத்திருப்பதை தவிர்க்கிறோம். இந்தக் கட்டுப்பாடுகள் நாங்களாக வைத்திருப்பதுதான். இந்தக் குழுவில் 14 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். விழாவுக்கு வந்த அனைவரையும் வரவேற்கிறேன்” என்றார்.
முதலில் அஜயன் பாலா பேசினார். கொரோனாவுக்குப் பிறகு நடந்த இயக்கியக் கூட்டத்துக்கு இப்படி ஒரு அரங்கு நிறைந்த வாசகர்கள், எழுத்தாளர்கள் வந்து குழுமியிருந்தது. வரவேற்கத்தக்கது” என்றார்
ரமணன் தனது உரையில் “குழுவின் அட்மின் வரும் பதிவுகளை முழுமையாக வாசிக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் அனைத்துப் பதிவுகளை யும் தினமும் வாசிக்கிறேன். எழுத்தில் வர்த்தக எழுத்து என்று ஒன்று இல்லை. ஒரு எழுத்தாளருக்கு எல்லா வகையில் எழுதத் தெரியவேண்டும். ஆனால் அதில் அவர்களின் முத்திரை இருக்கவேண்டும். ஜெயகாந்தன் காலத்தில் அப்படி யில்லை. இன்று எல்லா ஜானரிலும் எழுதவேண்டும். சாவி வெவ்வேறு ஜானரில் எழுதியிருக்கிறார். என்ன பயம் என்றால் ஒரு எழுததாளருக்கு முத்திரை விழுந்துவிட்டால் அவர் கிரைம் இவர் இலக்கியம் என்று பிரித்துவிடுவார்கள். சுஜாதா பல ஜானரில் எழுதியிருக்கிறார். ஆகையினால் ஒரு எழுத்தாளருக்கு கதை, கவிதை கட்டுரை என எல்லாவிதமான எழுத்துக்களையும் எழுதத் தெரிந்திருக்கவேண்டும் என்பது ரொம்ப முக்கியம்” என்றார்.
முன்னதாக எழுத்தாளர், பத்திரிகையாளர் ரமேஷ் வைத்தியா பேசினார். “ஒரு படைப்பு சிலரது பார்வையில் படித்து சரி பார்க்கப்பட்டு வெளியாவதுதான் சிறந்த முறை. யார் எப்படி வேணாலும் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவது அதைப் படிப்பதும் எவ்வளவு சிரமமான விஷயம் என்பதை அரங்கமே குழுங்கிக் குழுங்கி சிரிக்கும் அளவுக்குப் பேசி கலகலப்பூட்டினார்.
இந்த நிகழ்வில் பங்கேற்பாளர்கள் வாசிப்பு சம்பந்தமாகக் கேள்வி கேட்க அதற்கு சிறப்பு விருந்தினர்கள் பதில் சொன்னார்கள். ஒரு வாசகர் இலக்கியத்துக்கும் வர்த்தக இலக்கியம் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக ரமேஷ் வைத்யா தேவையில்லாமல் இயல்பாக எழுதுவது இலக்கியம். தேவை கருதி சீஸனுக்கு கட்டாயத்தின் பேரில் எழுதித் தருவது வர்த்தக இலக்கியம்” என்று பேசினார்.
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, மூத்த எழுத்தாளர் இரா.முருகன் சிறப்பாகப் பேசினார்.
கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்கள் படைப்புகளைப் பற்றிப் பேசினார்கள்.
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் விழாவிற்கான ஏற்பாடுகளை அருமையான முறையில் செய்து கொடுத்திருந்தார்.